விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019: சிம்மம் ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்
சென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. சிம்ம ராசிக்காரர்களே. உங்களுக்கு குருவின் பார்வையால் நீங்கள் இந்த ஆண்டு புது வீடு வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்பு அமையும் காலம் கனிந்துள்ளது.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

வளர்ச்சி தரும் புத்தாண்டு
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த விகாரி புத்தாண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. சூரியன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். நல்ல வேலை வாய்ப்புகள் வந்து சேரும். செவ்வாய் பத்தாம் வீட்டில் அமைவது சிறப்பு. யோகாதிபதி அவர் என்பதால் சகோதரர்களுடன் ஒற்றுமை அமையும். அயல்நாட்டு வேலை வாய்ப்பு அமையும். உயர்கல்வி யோகம் கை கூடி வரும் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் யோசித்து முடிவெடுங்கள். பிசினஸ் செய்பவர்களுக்கு வளர்ச்சிக்குரிய ஆண்டாக அமைகிறது.

குருவின் பார்வையால் லாபம்
இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 11 ஆம் இடத்தில் ராகுவும் 5 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள், புத்தாண்டு பிறக்கும் போது அதிசாரமாக தனுசு ராசியில் அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவது சிறப்பம்சம். உங்கள் பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானத்தை குருபகவான் பார்வையிடுகிறார். கஷ்டங்களையும், சோதனைகளையும் சந்தித்து வந்த நீங்கள் சாதனைகளை செய்யப்போகிறீர்கள்.

வீடு வாங்கும் யோகம்
குருபகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குழந்தைகளுக்கு திருமணம் கைகூடி வரும். ராகுவை குரு பார்வையிடுவதால் தன லாபம் உண்டு. மகான்களின் ஆசி கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசியை பார்வையிடுவதால் பெண்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி தொடர்பாக வெளிநாட்டு பயணம் அமையும். ஏழாம் வீட்டில் உள்ள சுக்கிரனால் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் சரியாகும். வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் யோகங்கள் மூலம் பணவரவு அதிகமாகும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு
இந்த ஆண்டு அற்புதமான முறையில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளதால் அரசியல்வாதிகளின் செல்வாக்கு பெருகும். புதன்பகவான் எட்டாம் வீட்டில் இருந்தாலும் நீசமடைந்திருப்பதால் அதிக அளவில் பணத்தை சம்பாதிப்பீர்கள்.எட்டாம் வீட்டில் புதன் இருப்பதால் கணக்குகளை முறையாக பராமரிப்பு செய்யுங்கள். சனிபகவான் 5ஆம் வீட்டில் அமைந்துள்ளது சிறப்பானது.
ராகு உங்கள் ராசிக்கு சாதகமாக லாப ஸ்தானத்தில் இருப்பதால் வெளிநாடு பயணங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.

குல தெய்வ வழிபாடு அவசியம்
மாணவ மாணவிகளுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று உயர் கல்வி பயிலும் யோகம் கைகூடி வந்துள்ளது. குல தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் தீமைகளின் பாதிப்பு குறையும். சனிபகவானுக்கு சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications