விகாரி தமிழ் புத்தாண்டு 2019-20: தனுசு ராசிக்காரர்களே... கடன் கொடுக்காதீங்க திரும்ப வராது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. தனுசு ராசிக்காரர்கள் இந்த புத்தாண்டில் புது வீடு கட்டி குடியேறுவீர்கள். பணத்தையும் நகைகளையும் பத்திரப்படுத்துங்கள்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

அஷ்டமத்தில் சந்திரன்

அஷ்டமத்தில் சந்திரன்


சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு தினத்தன்று சந்திராஷ்டமம் இருப்பதால் போராட்டமே வாழ்க்கையாக இருக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். பெரிய அளவில் முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். புதன், சுக்கிரன் சஞ்சாரத்தினால் பண வரவு அதிகரிக்கும். மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் தேடி வரும். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் பூர்வீக சொத்துக்கள் கைக்குத் தேடி வரும். பண விசயத்தில் மற்றவர்களை நம்ப வேண்டாம்.

புது வீட்டில் குடியேறுவீர்கள்

புது வீட்டில் குடியேறுவீர்கள்

செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கவனமாக இருக்கவும். செவ்வாய் பகவான் உங்க ராசியை பார்க்கிறார். வீடு வாங்கும் கனவு நனவாகும். பூர்வீக சொத்துப்பிரச்சினை முடிவுக்கு வரும். நேரத்திற்கு சாப்பிட்டு பழகுங்கள். காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். ஜென்ம சனி, ஜென்ம குருவினால் வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

ஜென்ம குரு என்ன செய்வார்

ஜென்ம குரு என்ன செய்வார்

புது வருடம் பிறக்கும் போது குரு பகவான் உங்க ராசிக்குள் நிற்கிறார். ஜென்ம குருவினால் மனதில் கலக்கம் ஏற்பட்டாலும் குருவின் பார்வை உங்க ராசிக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களின் மீது விழுவதால் தடைபட்டு வந்த திருமண பேச்சுவார்த்தை கை கூடி வரும், திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரும். சிலருக்கு அறநிலையத்துறையில் வேலை கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை

ஆரோக்கியத்தில் அக்கறை

ஜென்ம கேது, ஏழாம் வீட்டில் கேது சஞ்சாரம் உள்ளதால் தம்பதியரிடையே வீண் சண்டை சச்சரவுகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டாவிட்டால் மருத்துவ செலவுகள் தேடி வரும். முன்கோபம் எட்டிப்பார்க்கும். வார்த்தைகளில் கவனம் வைக்காவிட்டால் வம்புச்சண்டை தேடி வரும். ஜென்ம குரு வக்ரமடைந்து விரையத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. பாக்கெட்டில் இருக்கும் பணம் காலியாகும். திடீர் பயணங்களால் நன்மைகள் அதிகம் நடக்கும். கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும். ஐப்பசி மாதம் முதல் மீண்டும் ராசிக்குள் குரு பெயர்ச்சி அடைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

புதிய வேலை தேடி வரும்

புதிய வேலை தேடி வரும்

புதிய வேலை வாய்ப்பு அமையும். உத்யோக உயர்வும், வருமானமும் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் தேடி வரும். தடைபட்ட காரியங்கள் தடங்கலின்றி நிறைவேறும்.

பெண்களுக்கு இந்த புத்தாண்டில் நன்மை தரும் ஆண்டாக அமைந்துள்ளது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வீட்டிலும், அலுவலகத்திலும் மதிப்பும் மரியாதையும் தேடி வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+