மேஷம் முதல் மீனம் வரை கணவன் மனைவிக்குள் காதல் கெமிஸ்ட்ரி எப்படி?

காதல் கெமிஸ்ட்ரி யாருக்கு நன்றாக இருக்கும் எந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளின் படி அவர்களின் இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்பதை கூறிவிடலாம். அந்த வகையில் எந்த ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று பார்ப்போம்.

ராசி, நட்சத்திரம் பொருத்தம் பார்த்து பத்து பொருத்தமும் சரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்துதான் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் எல்லா தம்பதியருமே சந்தோசமாக அந்நியோன்னியமாக குடித்தனம் நடத்துவதில்லை.

காரணம் யார் பெரியவர்கள் என்ற ஈகோ மோதலே தம்பதியர்களிடையே பிரச்சினை வர காரணமாகிறது. 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்கள் தங்களின் துணையிடம் அன்பை பொழிவார்கள். யாருடைய காதல் கெமிஸ்ட்ரி ஜெயிக்கும் என்று பார்க்கலாம். நெருப்பு ராசி, நீர் ராசி, காற்று ராசி, நில ராசி என நான்கு தன்மைகள் கொண்ட ராசிக்காரர்கள் உள்ளன. யாருடன் யாரை சேர்க்க வேண்டும் என்று பார்த்து இணைக்க வேண்டும்.

நெருப்பும், காற்றும்

நெருப்பும், காற்றும்

மேஷம், சிம்மம், தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி, மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம், விருச்சிகம், மீனம் நீர் ராசிகள். நீரும் நெருப்பும் இணையாது. அதேபோல நிலத்தோடு காற்றும் இணையாது. நெருப்போடு காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலவே இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாக இருக்கும்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசியில் பிறந்த ஆண்கள் தனது மனைவியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். துணையின் மீது அதிக அன்பை செலுத்துவார்கள். இவர் தனது மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இல்லையெனில் அதிக சந்தேக குணம் கொண்டவராக திகழ்வார். மேஷம் விருச்சிக ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் விரிசல் வரும் மேஷம் ராசி நெருப்பு குணம் கொண்ட ராசி. விருச்சிகம் நீர் ராசி. இவர்கள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பண்பு இருக்காது. அதனால் இருவருக்கு இடையே விரிசல் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசி உள்ளவர்களுக்கு, விருச்சக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத குணம் இருப்பதால், இவர்களின் வாழ்வில் துன்பங்கள் ஏற்படும். ரிஷபம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தனது துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். ஆனால் சிலருக்கு காதல் தோல்வி, திருமண வாழ்க்கை முறிவு ஏற்படும். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால், இவர்களின் இல்லற வாழ்க்கை சிறக்கும். மிதுனம் கடகம் ராசிக்காரர்கள் மிகவும் சாந்தமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். ஆனால் கடக ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரரிடம் அதிக அன்பு செலுத்தினால், இருவரிடமும் எவ்வித பிரச்சனையும் வராது.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக நினைப்பார்கள். சுதந்திரத்தை அதிகம் விரும்புபவராக இருப்பார்கள். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சில நேரங்களில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பெரும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். தனது துணை மற்றவர்களுடன் பேசுவது அல்லது பழகுவதை விரும்ப மாட்டார்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டுவார்கள். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள். இவர்களது மண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும். சிம்மம் நெருப்பு ராசி. கன்னி நில ராசி இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகரித்து சண்டைகள் ஏற்படும்.

கன்னி

கன்னி

கன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். காரணம் கன்னி நில ராசி மகரம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவியாக இருப்பார்கள். கன்னிராசிக்காரர்களும் மிதுன ராசியில் பிறந்தவர்களும் திருமணம் செய்துக் கொண்டால் பணத்தால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காரணம் சுக்கிரனின் அதிபதி காதலை உற்சாகப்படுத்துவார். இந்த ராசிக்காரர்கள் மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லதே நடக்கும். மனைவியின் ஆலோசனையை கேட்டல் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். இவர்கள் இரண்டு திருமணம் செய்யும் வாய்ப்பும், காதல் தோல்வி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் தனது துணையை மிகவும் விரும்புவதுடன், தனது துணையை ஒரு காதலியாக நினைத்து சிறப்பாக வாழ்வார்கள். அதனால் தனது துணையை அனைத்து விதத்திலும் திருப்தியாக வைத்திருப்பார்கள். நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள் நில ராசிக்காரர்களுடன் இணையலாம்.
இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்போடு காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை ரம்மியமானதாக செல்லும். இந்த ராசிக்காரர்கள் தனது துணையை முழுவதுமாக நேசிப்பார்கள். எனவே இவர்களுக்கு காதல் திருமணம் மிகவும் சிறப்பாக அமையும். தனுசு ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுடன் இணையக்கூடாது. இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள். ஆனால் இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையான பகுதியை ரசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் காதல் திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். நிலம் ராசிக்காரர்கள் நீர் ராசிக்காரர்களுடன் திருமண பந்தத்தில் இணையலாம்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இவர்களின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். மிதுனம், துலாம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை துணையாகக் கொண்டால், இவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாகும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கையானது, இரண்டு திருமணங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஏனெனில் முதல் திருமணத்தில் நிம்மதியின்றி வாழ்க்கை அமைந்தால், இவர்கள் மறுமணம் செய்து கொண்டு சுகத்துடன் வாழக் கூடியவராக இருப்பார்கள். துலாம் காற்று ராசி, மீனம் நீர் ராசி இவர்கள் இணைந்தால் தினசரி போர்தான். பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+