Sani Peyarchi: 2025 இல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது? என்ன பரிகாரம் செய்யலாம்?
சனிப்பெயர்ச்சி 2025: சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசிக்கு இடம்பெயரவுள்ளார். அந்த வகையில், எந்தெந்த ராசியினருக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க... (Elarai sani 2025)
சனிப்பெயர்ச்சியான ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். நாம் செய்கின்ற கர்மத்திற்கு ஏற்ப நல்ல பலனைக் கொடுப்பவர் சனி பகவான். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். சனி ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது சிலருக்கு ஏழரை நாட்டு சனி, சனி திசை தொடங்குகிறது.

2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதியன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். நவக்கிரகங்களில் சனி பகவான் மட்டுமே ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்வதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
ஏழரை நாட்டு சனி என்பது மொத்தம் ஏழரை ஆண்டுகள் நீடிக்கும். முதல் இரண்டரை ஆண்டுகள்தான் விரைய சனி, அதற்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனி, அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகள் பாத சனி என்று கூறப்படுகிறது. இவ்வாறு மொத்தம் ஏழரை ஆண்டுகள் நடைபெறும். யாருடைய ஜாதகத்தில் சனி உச்சத்தில் இருக்கிறாரோ அவர்களுக்கு லைஃப்டைம் சென்டில்மென்ட் என்பதுபோல பல்வேறு நற்பலன்கள் கிடைக்கப்பெறும்.
பன்னிரண்டு ராசிகளில் கும்ப ராசிக்கு அதிபதியாக திகழ்கிறார் சனி பகவான். தனது சொந்த ராசியான கும்பத்தில் பயணம் செய்து வரும் சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசிக்கு இடம்பெயரவுள்ளார். அந்த வகையில், எந்தெந்த ராசியினருக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மேஷம்: சனி பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. பாதம், முதுகு, கழுத்து, பாத வலி ஏற்படும். உடற்பயிற்சி மிகவும் முக்கியம். பிள்ளையாரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். தொழில், வியாபாரம், சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஏழரை சனியின் தொடக்கம் என்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும். எதிர்கால பிரச்னைகளுக்கு இந்த காலகட்டத்திலேயே தயாராகிக் கொள்ள வேண்டும்.
கும்பம்: 2025 ஆம் ஆண்டு நிகழவுள்ள சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இறுதி கட்டம் என்று அழைக்கப்படும் பாத சனி தொடங்கவுள்ளது. குடும்ப பிரச்னைகள் தீரும். பிள்ளைகளுக்கு அனுகூலமான அமைப்பு காணப்படும். தொழில் நன்மை கிட்டும். வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். தொழில், பணவரவு நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து, சொத்து பிரச்னை போன்றவைகள் நீங்கும்.
குரு பார்வை இருப்பதால் தைரியமாக இருங்கள். கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகளையும், கடும் சவால்களையும் சந்தித்து வந்தவர்களுக்கு 2025 புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குவார்கள். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது அவசியம்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் சுற்று ஜென்ம சனி தொடங்குகிறது. பொருளாதார வளமையைக் கொடுக்கும். உத்யோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள். திருமண அமைப்பு, வியாபார அனுகூலம், உத்யோகத்தில் மாற்றம் கிடைக்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், படிப்பு மாற்றம் உண்டாகும். தடைகள் அனைத்தும் விலகும். உறவுகள் மற்றும் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கழுத்து, முதுகு, சுளுக்கு, நியாபக மறதி போன்றவை ஏற்படும். பொறுமை அதிகமாக சோதிக்கப்படும். நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களால் பிரச்னைகள் உண்டாகும். தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். பெரிய அனுகூலம், ஜெயம் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்த மனக் கஷ்டங்கள் படிப்படியாக நீங்கும். பத்தாம் இடத்தை குரு பார்ப்பதால் ஜெயம் கிட்டும்.












Click it and Unblock the Notifications