சனி பெயர்ச்சி பலன் 2023: 2024 முதல் குபேர யோகத்தை தரும் கும்ப சனி.. புரமோசன் யாருக்கு?
சென்னை: 2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. எத்தனையோ சிக்கல்களை சந்தித்து மீண்டு வந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகிறார்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தான அதிபதி, லாப ஸ்தான அதிபதி. 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்யப்போகிறார். 2024ஆம் ஆண்டு முதல் நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும். தொட்டது துலங்கும். செவ்வாய் பகவான் உங்கள் ராசி நாதன், கேது உங்கள் அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி. இந்த இரண்டு கிரகங்களின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு லாப சனி லாபத்தை தரப்போகிறார்.

தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். நினைத்ததை எல்லாம் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் லாபமே கிடைக்கப்போகிறது. வேலையில் இருப்பவர்கள் கூட சொந்த தொழில் தொடங்குவீர்கள். புரமோசனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லையே என்று வருத்தப்பட்டவர்களுக்கு இனி கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு சிக்கல்களையும் இடைஞ்சல்களையும் கொடுத்து வந்த உயரதிகாரி இடம் மாறி செல்வார்.
வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் இனி ஒன்று சேருவீர்கள். தோற்றத்தில் கம்பீரமாகவும், பொலிவாகவும் காட்சி அளிப்பீர்கள். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீடு சொத்து சேர்க்கை ஏற்படும். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். 2024ஆம் ஜனவரி முதல் டிசம்பர் வரைக்குமே உங்களுக்கு யோக காலம்தான். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயரும்.
கும்ப சனி எப்போதுமே லாபத்தை தான் தருவார். பொருளாதார நிலை உயரும். பண வருமானம் அதிகரிப்பதால் வங்கியில் சேமிப்பு உயரும். 2024ஆம் ஆண்டு முதல் நீங்கள் தான் ராஜா அனைத்திலும் வெற்றி பெற்று வீர நடைபோடப்போகிறீர்கள். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கும்ப சனி குபேர யோகத்தை தரப்போகிறது.












Click it and Unblock the Notifications