இயர் எண்டர் ஜோதிடம் 2023: சனி தரும் சச யோகம்.. 2024ல் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம்
சென்னை: கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு சச மகா யோகமும் ராஜயோகமும் கிடைக்கப்போகிறது. 2024ஆம் ஆண்டு முழுவதும் கும்ப சனியால் யாருக்கெல்லாம் வெற்றிகளும் கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
அள்ளித்தரும் சனி: சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். கும்ப ராசி சனிபகவானின் மூலத்திரிகோணராசி. கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் 2024 ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு வெற்றிகளையும் எதிர்பாராத ராஜ யோகத்தை தரப்போகிறார்.

மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பல வழிகளில் இருந்தும் பணம் வரப்போகிறது. வெற்றிகள் தேடி வரும் காலம் என்பதால் 2024ஆம் ஆண்டில் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் என்று பாடப்போகிறீர்கள்.
ரிஷபம்: சனி பகவான் ரிஷபம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சச மகா யோகம் கிடைக்கப்போகிறது. செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். வேலை செய்யும் இடத்தில் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். 2024ஆம் ஆண்டு முழுவதும் அற்புதமான காலமாக அமையப்போகிறது. கவுரவம் அந்தஸ்து தேடி வரும். கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஏழாவது வீட்டில் சனி பகவான் கண்டச்சனியாக சஞ்சரிக்கும் காலம் பொன்னான காலம். முழு அதிகாரத்தையும் சனி பகவான் தருவார். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் சச யோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. செழிப்பும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். அர்த்தாஷ்டம சனி என்றாலும் அஞ்ச வேண்டாம். சசமகா யோகம் தரப்போகும் சனிபகவான் உங்களுக்கு சொத்து சுகங்களை தரப்போகிறார். சனி பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. சனி கொடுத்தால் யார் தடுப்பார்? அவர் அள்ளிக்கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.
கும்பம்: ஜென்ம சனிதான் என்றாலும் சனி பகவான் உங்கள் ஆட்சி நாதன். எத்தனையோ சிரமங்கள் பட்டாலும் அதை எல்லாம் சமாளிக்கும் மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் சனி பகவான் தந்து கொண்டிருக்கிறார். சச மகா யோகம் செயல்படப்போகிறது. உங்களுடைய வேலையில் மிகப்பெரிய திருப்புமுனையையும் முன்னேற்றத்தையும் சனி பகவான் தரப்போகிறார். நோய்கள் நீங்கும். உடல் ரீதியாக உற்சாகமாக இருப்பீர்கள். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் ஒன்று சேருவார்கள். ஜென்ம ராசியில் ஆட்சி பெற்றுள்ள சனிபகவான் சச மகா யோகத்தை தரப்போகிறார்.












Click it and Unblock the Notifications