நவம்பர் மாத ராசி பலன் 2021: ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகுது
நவம்பர் மாதம் ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் யோகங்கள் அதிகம் நிறைந்த மாதமாக உள்ளது.
சென்னை: நவம்பர் மாதத்தில் சூரியன் துலாம், விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச்ச பங்க நிலையில் உள்ள சூரியன் மாதத்தின் நடுவில் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். செவ்வாய் வீட்டில் சூரியன் கேது உடன் கால புருஷனுக்கு எட்டாம் வீட்டில் அமர்வது அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும். குரு இந்த மாதம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வையால் ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு யோகங்களும் அற்புதங்களும் நிகழப்போகிறது.
நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசியில் ராகு, ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், ஏழாம் வீட்டில் கேது எட்டாம் வீட்டில் ராசிநாதன் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
மாத பிற்பகுதியில் புதன், சூரியன் இடப்பெயர்ச்சியாகி ஏழாம் வீட்டில் உள்ள கேது உடன் இணைகின்றனர். ஒன்பதாம் வீட்டில் குரு பத்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

கவனமும் நிதானமும் தேவை
வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றாலும் பளுவும் கூடும். அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பத்தாம் வீட்டிற்கு செல்வதால் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனமும் நிதானமும் தேவை. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். புதிய முயற்சிகளுக்கு தடைகளை தாண்டி வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்காக எதுவும் முயற்சி செய்யாதீர்கள்.

பொருட்கள் பத்திரம்
கிரகங்கள் ஆறாம் வீட்டில் கூடியுள்ளதால் குடும்ப உறுப்பினர்களிடையே சில சண்டை சச்சரவுகள் வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கலாம். வங்கிக் கடன் கிடைக்கும் வீடு நிலம் வாங்கலாம். ஆறாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் திருமண சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் பேச வேண்டாம்.

மருத்துவ ஆலோசனை
கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன விவாதங்கள் ஏற்படும். சண்டை சச்சரவுகளை தவிர்க்க பொறுமையும் நிதானமும் தேவை. காதலர்களிடையே சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ப்பது நல்லது. உணவு விசயங்களில் கவனம் தேவை. உடல் நல பாதிப்புகள் வந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மாணவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உயர்கல்வி தொடர்பாக முடிவு எடுக்கும் போது பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. ரிஷப ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் அதிகம் கவனமாகவும் நிதானத்தோடும் இருக்க வேண்டிய மாதமாகும்.

வேலையில் புரமோசன்
புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரம் நன்மையைத் தரப்போகிறது. அஷ்டம ஸ்தானத்தில் உள்ள குரு பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். குருவின் பார்வையால் நல்ல வேலை கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். மன நிம்மதியும் தன வருமானமும் வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம். பெண்களுக்கு இது வெற்றிகரமான மாதம் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் உயர்கல்வி யோகத்தையும் தரும். தேர்வு பயணம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சுப காரியம் கை கூடும்
சுப காரியங்கள், விருந்து விஷேசங்களில் பங்கேற்பீர்கள். சுவையான உணவுகள் சாப்பிட கிடைக்கும். மாத பிற்பகுதியில் குரு பாக்ய ஸ்தானத்திற்கு வருவதால் நிறைய சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். சூரியன்,புதன் இடம் மாறுவதால் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவைப்படும். சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் பயணங்களில் கவனம் தேவை. ஏழாம் வீட்டில் உள்ள சுக்கிரன் பார்வை, ஒன்பதாம் வீட்டில் உள்ள குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண யோகம் கை கூடி வரும். காதலர்களிடையே நெருக்கம் கூடும். திருமணம் தொடர்பாக பேசலாம். மொத்தத்தில் நவம்பர் மாதத்தில் உங்களுக்கு வரும் நெருக்கடிகளை வெற்றிகரமாக கடந்து செல்வீர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications