NTK Seeman: சட்டமன்றத் தேர்தலில் சீமான் ஜெயிப்பாரா? - பிரபல எண்கணித ஜோதிடர் கணிப்பு
Assembly Election: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. வரும் தேர்தல் சீமானுக்கு கைகொடுக்குமா, 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டு வெற்றியைப் பெற முடியுமா என்பது குறித்து பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

வரும் தேர்தலில் சீமான் ஜெயிப்பாரா என்பது குறித்து எண்கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன் கூறியதாவது: பெயர்: SEEMAN (3 5 5 4 1 5 / 23) -> 5 பிறந்த எண்: 8.11.1966 (32) -> 5 கட்சிப் பெயர்: NAAM TAMILAR KATCHI (5 1 1 4 / 4 1 4 1 3 1 2 / 2 1 4 3 5 1) / 43 -> 7.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரணையூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். திரைப்பட இயக்குநர், நடிகர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவர். எவரையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொண்டவர். இவர் கட்சிக்கு வரும் தேர்தல் தேதி வெற்றிக்கு வழிகாட்டுமா என்பதைப் பார்ப்போம்.
தேர்தல் நாள்: 23.4.2026 / 19 -> 1 வாக்கு எண்ணிக்கை: 4.5.2026 / 19 -> 1 சீமான் நிற்கும் தொகுதி: KARAIKUDI (2 1 2 1 1 2 6 4 1) / 21 -> 3. ஒட்டுமொத்தமாக 234 (= 9) தொகுதிகளில் சீமான் ஆட்களை நிறுத்துவது அவரின் கட்சி சார்பாக நிற்க வைப்பதே நியூமராலஜியின் தத்துவப்படி மிகப்பெரிய பின்னடைவு தரும். ஏனெனில் இவரின் பிறந்த தேதியான 8-ற்கு மிகவும் சார்பற்ற எண்கள் 1-ம் எண்ணும் 9-ம் எண்ணும். மொத்த தொகுதிகளின் கூட்டு எண் 234 (= 9).
தேர்தல் நாளின் கூட்டு எண்: 23.4.2026 = 19 (= 1). இந்த ஒன்று என்ற கூட்டு எண்ணும் சார்பாக இல்லை. வாக்கு எண்ணிக்கை நாளின் கூட்டு எண்: 4.5.2026 = 19 (= 1). இதுவும் 1 எண் வருவது சிறப்பில்லை. தேர்தல் தேதி 23 (5) மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கிறது அவருக்கு. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சமாக 7 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரங்கள் வரை தனது வேட்பாளர்கள் மூலம் வாக்குகள் பெறுவதற்கான வாய்ப்பை தேர்தல் தேதியான 23 பெற்றுத் தர வாய்ப்பிருக்கிறது.
ஸ்ரீமான் சீமான் சற்று சிந்தித்து செயல்பட்டிருந்தால் 17லிருந்து 23 MLA-க்களை இந்த தேர்தலிலேயே பெற்றிருக்க நிறைய வாய்ப்பை அவர் பிறந்த தேதி கொடுத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications