Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்டோபர் மாத ராசி பலன் 2021: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறது

அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வையால் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதம் பிறக்கப்போகிறது. இந்த மாதத்தில் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்த மாதமாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி,குரு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இந்த மாதத்தில் மிதுனம் முதல் கன்னி ராசி வரை பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

அக்டோபர் 1ல் புதன் கன்னி ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 2ஆம் தேதியன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது. சூரியன் 17ஆம் தேதி துலாம் ராசியில் நீசமடைகிறார். மாத பிற்பகுதிகளில் குருபகவான் வக்ர கதியில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். மாத இறுதியில் புதன் துலாம் ராசியில் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார்.

இந்த கிரகங்களின் கூட்டணி சஞ்சாரம் பார்வை பலத்தால் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கப்போகிறது.

யோகங்கள் நிறைந்த மாதம்

யோகங்கள் நிறைந்த மாதம்

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் கூட்டணி பார்வையால் சாதக பாதகங்கள் நிறைய உள்ளன. அலுவலகத்தில் செய்யும் வேலையில் அதிக கவனம் தேவைப்படும். புதிய வேலைக்காக அதிக முயற்சி செய்யுங்கள் தடைகளைத் தாண்டி பலன்கள் நடைபெறும். நீச்ச பங்க ராஜயோகமும், விபரீத ராஜயோகமும் கை கூடி வந்துள்ளது. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நான்காம் வீட்டில் உள்ள சூரியன் செவ்வாய் கூட்டணி உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நிதானம் அவசியம்

நிதானம் அவசியம்

திருமண பேச்சுவார்த்தைகளை ஒத்திப்போடுங்கள். உங்க பார்ட்னர் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் சில சண்டை சச்சரவுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. உணவு விசயத்திலும் கவனம் தேவைப்படும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் அதிக கவனம் தேவைப்படும். படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.

குரு சனி கூட்டணி

குரு சனி கூட்டணி

புதன் இந்த மாதம் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியானாலும் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்ந்து மாத பிற்பகுதியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். பெண்கள் இல்லத்தரசிகளுக்கு கூடுதல் பொறுப்பு அதிகரிக்கும். இந்த மாதத்தில் புதிய செயல்களைத் செய்யத் தொடங்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. இந்த மாதம் குரு சனி கூட்டணியால் சில பாதகங்களும் தடைகளும் ஏற்படும். எதையும் அவசரப்பட்டு செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

புதிய வேலைக்கு முயற்சி

புதிய வேலைக்கு முயற்சி

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளைப் பொறுத்து நன்மைகள் அதிகரிக்கும். இந்த மாதம் வக்ர நிவர்த்தி அடைந்த குருவின் பார்வை உங்கள் ராசிக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இந்த மாதம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளன. புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பார்வையும் முயற்சி ஸ்தானத்தின் மீது விழுவதால் முயற்சிகள் கை கூடி வரும். மூன்றாம் வீட்டில் செவ்வாய் சந்திரன் இணையும் காலத்தில் உங்கள் ராசிக்கு சந்திர மங்கல யோகம் கிடைக்கும் போது வேலையில் நல்ல பலன் கிடைக்கும். களத்திர காரகன் சனியோடு குரு இணைந்துள்ளதால் திருமண பாக்கியம் கை கூடி வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்

சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் கேது உடன் இணைந்துள்ளதால் வண்டி வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். எதிர்கால திட்டமிடல் வெற்றிகரமாக நடைபெறும். காதல் இனிக்கும் காதலர்களிடையே சண்டைகள் ஏற்பட்டாலும் எளிதில் சமாதானமடைவீர்கள். செவ்வாய், புதன், சூரியன் இணைந்து பயணம் செய்யும் காலத்தில் நிறைய நண்மைகள் நடைபெறும். குடும்பத்தலைவர்கள் இல்லத்தரசிகள், பெண்களுக்கு நிறைய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் நினைத்த காரியம் கை கூடி வரும். புதிய மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு நிம்மதியான விசயங்கள் நடைபெறும். மொத்தத்தில் அக்டோபர் மாதத்தில் சந்திராஷ்டம நாட்கள் தவிர பிற நாட்களில் சந்தோஷ சம்பவங்கள் அதிகம் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது.

புதிய முயற்சிகளுக்கு வெற்றி

புதிய முயற்சிகளுக்கு வெற்றி

சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ராசிநாதன் சூரியன் செவ்வாயுடன் இணைந்து இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு சனி கூட்டணி ஆறாம் வீட்டில் உள்ளது. மூன்றாம் வீட்டில் உள்ள சுக்கிரன் புதன் கூட்டணி மாதத்தின் முதல் வாரத்திலேயே பிரிகிறது. வக்ரமடைந்த புதன் கன்னி ராசிக்கு வந்து மீண்டும் உச்சமடைகிறார். பத்தாம் அதிபதி சுக்கிரன் கேது உடன் இணைந்து ராகுவின் பார்வையும் விழுவதால் புதிய வேலைக்கு கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டியிருக்கும். கடுமையான முயற்சிக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். எதிரிகள் தொந்தரவு அதிகரிக்கும். ராசிநாதன் மாத முற்பகுதியில் வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தெளிவான உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.

பொறுமையும் நிதானமும் தேவை

பொறுமையும் நிதானமும் தேவை

குருபகவானின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். புத்தியில் தெளிவும் ஆற்றலும் அதிகரிக்கும். நீச்சமடையும் சூரியனை ஆட்சி பெற்ற சனி பார்வையிடுவதால் நீச்சபங்கமடைகிறார். திருமணம் சுப காரியங்கள் பேச இது ஏற்ற தருணம் அல்ல. காதல் முயற்சிகள் சில நேரங்களில் கசக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கினாலும் வயிறு, அஜீரணக் கோளாறுகள் நீங்கும். இல்லத்தரசிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் பொறுமையாக கையாளவும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அக்டோபர் மாதம் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய மாதமாகும்.

சுப விரையம்

சுப விரையம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக்கொண்ட கன்னி ராசிக்காரர்களே, குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனதில் இருந்த சிக்கல்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உங்கள் ராசி அதிபதியும் தொழில் ஸ்தான அதிபதியுமான புதன் உங்கள் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி வக்ரமடைந்து மீண்டும் உங்கள் ராசிக்கு திரும்புகிறார். குருவின் பார்வையால் திருமண யோகம் கை கூடி வரும். காதல் வாழ்க்கை உற்சாகத்தைக் கொடுக்கும். நிறைய பண வரவு வரும் கூடவே விரைய செலவும் ஏற்படும் சுப விரையம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கோபத்தை குறைப்பது நல்லது

கோபத்தை குறைப்பது நல்லது

வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறப்போகிறது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய வரன்கள் பேசி முடிக்கும் நேரம் கை கூடி வந்துள்ளது. சுக்கிரன் மூன்றாம் வீட்டில் கேது உடன் இணைந்துள்ளதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். செவ்வாய் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். செவ்வாய்க்கு குரு பார்வை கிடைக்கிறது. இல்லத்தரசிகளுக்கு, பெண்களுக்கு மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாத பிற்பகுதியில் சூரியனும் செவ்வாயும் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகின்றனர் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும் என்றாலும் கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+