விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. அக்டோபரில் அதிர்ஷ்டம் உச்சம்.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்

Subscribe to Oneindia Tamil

அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது விருச்சிகம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

october-matha-rasi-palan-what-kind-of-benefits-will-get-viruchigam-rasi-people-in-this-month

அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உன்னதமான உயர்வுகளைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். தொட்டது துலங்கும், அதிர்ஷ்டம் தரக்கூடிய யோகம் ஏற்படும். கனவுகள் அனைத்து நனவாகும். எல்லோரும் பாராட்டக்கூடிய அமைப்பு உள்ளது. கெளரவம், அந்தஸ்து உயரும். பணம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். ராசிநாதன் நீச்சத்தில் இருந்தாலும் நீச்சபங்க ராஜயோகத்தில் இருப்பது மிகப்பெரிய யோகம்.

உச்சகுரு பார்வை

ராசிநாதன் நீச்சத்தில் மாதம் முழுவதும் உச்ச குருவோடு சேர்ந்திருக்கிறார். ராசியை உச்சகுரு பார்க்கிறார். நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய தைரியம் ஏற்படும். எதிலும் முன்னணியில் நிற்கக்கூடிய அமைப்பு ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல மாதம். கிரக மாற்றங்கள் 4 ஆண்டுகளுக்கு உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.

சனி, ராகு கேது பெயர்ச்சி

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு மாறக்கூடிய சனிப்பெயர்ச்சி 6 ஆம் இடத்தில் வரப்போகிறது. டிசம்பர் மாதம் ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. 3 ஆம் இடத்தில் ராகுவும், 9 ஆம் இடத்தில் கேதுவும், கேள யோகத்தில் குருவும் வருவதால் பண வரவு அபரிமிதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 4 வருடத்திற்கு 10 மடங்கு சம்பாதிக்கக்கூடிய யோகம் ஏற்படும்.

தொழில் தொடங்கும் யோகம்

தொழில் தொடங்குவதற்கான நல்ல காலகட்டம். வேலையை விட்டு விட்டாலும், வேலையை இழந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. இருக்கும் வேலையை விட இரண்டு மடங்கு சம்பளத்தில் வேலை கிடைக்கும். அல்லது தொழில் தொடங்கக்கூடிய யோகம் ஏற்படும். அடுத்து வரக்கூடிய ராகு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே அருமையான யோகத்தைக் கொடுக்கும்.

புத்தாண்டில் நல்ல நேரம்

வயதிற்கு ஏற்ற வகையில் இப்போது இருக்கிற பிரச்சனைகள், சங்கடங்கள் எல்லாமே வரும் புத்தாண்டின் ஆரம்பத்தில் இருந்தே தீருவதற்கான யோகம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்ப அமைப்பு அற்புதமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். காதல் அமைப்பு அற்புதமாக இருக்கும்.

உதவி

நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு பொருளாதாரம் ரீதியாக உதவக்கூடிய அமைப்பு உள்ளது. வேலை, தொழில், குடும்பம், பிள்ளைகள் என எல்லா விஷயங்ளும் 4 ஆண்டுகளுக்கு அற்புதமாக இருக்கும். அதிர்டத்தையும், முன்னேற்றத்தையும் தரக்கூடிய யோகம் நிறைந்த மாதமாக இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+