Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு வாயில சனி.. இதை மட்டும் பண்ணிடவே பண்ணிடாதீங்க
அக்டோபர் மாத பலன்: அக்டோபர் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ஏற்படும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திலும் முக்கியமான கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகின்றன. சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் கோபதாபங்களைத் தவிர்ப்பது நல்லது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுருங்கிக் கொள்வது நன்மை பயக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு, வெளியிடங்களில் நல்ல அனுகூலங்கள் காணப்படும். தடைகள் அனைத்தும் நீங்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும்.
பண வரவு
பண வரவுக்கான உத்தரவாதம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் அமைப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. உள்ளூர், வெளியூர் பயணங்கள் மிகப்பெரிய அனுகூலத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தி தரும்.
குழப்பம் வேண்டாம்
இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். உங்கள் வாழ்க்கை வசந்தம் மிகுந்ததாக மாறும். குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் இப்படி செய்வார்களோ, அப்படி செய்வார்களோ என சிந்தித்துக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்தில் இருக்கும் சனி, வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் சூரியனை பார்ப்பதால் உறவுகள், துணை, காதல் அமைப்பிலும் குழப்பத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
காது, மூக்கு, தொண்டை, பல் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு தொடர்ந்து செய்து வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும். வாக்குவாதம், தர்க்கத்தை தவிர்த்தால் கண்டிப்பாக பெரிய அனுகூலம் ஏற்படும். வாகன அமைப்பில் நல்ல ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.












Click it and Unblock the Notifications