பங்குனி மாத பலன் 2026: சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் மிதுன ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Panguni matha palangal)
மிதுனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பங்குனி மாதம் முழுவதுமே புதன் குருவின் பார்வையில் இருக்கிறார். 10 ஆம் இடத்தில் சூரியன் இருப்பது பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பங்குனி 19 ஆம் தேதிக்குப் பிறகு பெரிய குறைகள் இருக்காது. நன்மைகள் அதிகளவில் இருக்கும். கட்டடம், பூமி, மருத்துவம் ஆகிய தொழில் சார்ந்தவர்களுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும்.
அரசால் அனுகூலம்
அரசுத் தொழில் செய்பவர்கள், அரசு வேலைக்கான அனுமதிகள், தேர்வுகள் எழுதுபவர்கள், அரசாங்கம் சார்ந்த விஷயங்களுக்கு அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு அந்த விஷயங்கள் எல்லாம் கிடைக்கும் யோகம் உண்டாகும். ராசிநாதன் வலுவாக குருவின் பார்வையில் இருப்பது, ராசியும் குருவின் பார்வையில் இருப்பது நீங்கள் நினைக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் புத்திசாலித்தனமாக சாதிக்கும் அமைப்பை ஏற்படுத்தும்.
புத்திசாலித்தனம்
எல்லா விஷயங்களையும் எளிமையாக சமாளித்துச் செல்வீர்கள். சிலருக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். இன்னும் சிலருக்கு குலதெய்வம், கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குச் செல்லும் அமைப்பு ஏற்படும். விருப்பப்பட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
கூடுதல் லாபம்
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய காலகட்டம். பண வரவு நன்றாக இருக்கும். அனைத்திலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும்.
எதிர்ப்புகள் நீங்கும்
பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். அடுத்தடுத்து நல்லவைகள் நடக்கக்கூடிய மாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications