Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்
புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.
புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு டென்சன் அதிகமாக இருக்கும் காலகட்டம். அதனை பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. லக்கினத்தில் சனி வக்கிரம், 7 ஆம் இடத்தில் சூரியன், புதன் இணைவு பெறுகின்றனர். சனி வக்கிரப் பார்வையாக சூரியனையும், சூரியன் வக்கிரப் பார்வையாக புதனைப் பார்வையிடுகின்றனர். கணவன், மனைவிக்குள் பயங்கரமான பிரச்சனைகள் ஏற்படும்.
பண விஷயத்தில் கவனம்
பார்ட்னர்ஷிப் பிரியும் சூழல் உண்டாகும். அக்கவுண்ட்ஸில் வரும் தவறைக் கண்டுபிடிக்கும்போது வன்மத்தால் சண்டை போடுவது போன்ற சூழல் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. மருத்துவமனை, ஈபி, கல்வி நிறுவனம், சான்றிதழ் தொடர்பான விஷயங்களில் யாரிடமும் பணம் கொடுத்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
6 ஆம் இடத்தில் சுக்கிரன், கேது இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு, ஆண்களுக்கு லிவர் தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. உணவில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஹோட்டல் கடை வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். விரையத்தில் இருக்கும் ராகு, சுக ஸ்தானத்தில் இருக்கும் குரு ஆகியவை தெய்வ கடாட்சத்தை ஏங்குகின்றன.
வழிபாடு
நாகராஜரை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும். இல்லையெனில் பிருந்தாவன பிரவேஷம் அடைந்துள்ள ஞானிகளின் சன்னதிகளுக்குச் சென்று வருவது நல்லது. எதிர்பார்க்காத பல விஷயங்கள் சாதகமாக நடக்கும். நல்ல மாற்றங்கள் உண்டாகும். மீனத்திற்கு சனி வக்கிரமாக அமர்ந்திருந்ததில் இருந்து ஆரோக்கியத்தில் பிரச்சனை, அலைச்சல் ஏற்பட்டிருக்கும்.
பிரச்சனைகள் வரும்
மனதில் தேவையில்லாத சங்கடங்கள், சஞ்சலங்கள், அழுத்தங்கள் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. புரட்டாசி மாதம் முழுவதும் மற்றவர்களால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்பதால் பிரச்சனைகள் வரும். வயிறு பிரச்சனைகளை பார்த்துக் கொள்வது நல்லது. 2 ஆம் குழந்தைக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மாமியார், மாமனார் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வழிபாடு
பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருச்சியில் உள்ள நரசிம்மர் கோயிலில் வழிபாடு செய்வது, உக்கிர நரசிம்மர் வழிபாடு செய்வது பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். மகிழ்ச்சி ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications