Purattasi matha Palan: புரட்டாசியில் கவனமாக இருக்க வேண்டிய 2 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க
புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 2 ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.
புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 2 ராசிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசி அல்லது லக்கினக்காரர்கள் சனி வக்ர நிலையில் இருந்து ராசியை பார்ப்பதால் அதிக கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். மனைவியுடன் அதிகளவு பிரச்சனை ஏற்படும். வீண் வாக்குவாத்ததை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும். நிதியை மிகுந்த கவனமாக கையாள வேண்டும்.
சிபாரிசு செய்வது, மற்றவர்களை நம்பி பணம் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் கவனம் அவசியம். கோபத்தை தவிர்த்து எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். உடன் பணியாற்றுவோர் முதுகில் குத்துவார்கள். அவர்களிடம் இடைவெளியை கடைபிடிப்பது முக்கியம். குரு 10 ஆம் இடத்தில் இருப்பதால் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு உத்யோகம், தொழிலில் மாற்றங்கள் ஏற்படும்.
விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பது மனதில் தேவையில்லாத கவலைகளை உருவாக்கும். எதிர்மறை எண்ணங்களால் தூக்கமின்மை உருவாகும். முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். வெளிநாடுகளில் இருப்போர் தாயகம் திரும்பும் சூழல் உருவாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். கோபத்தில் முடிவு எடுத்து விடக்கூடாது. தலை வலி, கண், பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. நரசிம்மர் வழிபாடு செய்வதால் பிரச்சனைகளில் இருந்து விலக்கி நல்ல பலன்களை கொடுக்கும்.
மீனம்
மீன ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு டென்சன் அதிகமாக இருக்கும் காலகட்டம். கணவன், மனைவிக்குள் பயங்கரமான பிரச்சனைகள் ஏற்படும். பார்ட்னர்ஷிப் பிரியும் சூழல் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. யாரிடமும் பணம் கொடுத்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு, ஆண்களுக்கு லிவர் தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. உணவில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஹோட்டல் கடை வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். நாகராஜரை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.
மனதில் தேவையில்லாத சங்கடங்கள், சஞ்சலங்கள், அழுத்தங்கள் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. புரட்டாசி மாதம் முழுவதும் மற்றவர்களால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கேள்வி கேட்பதால் பிரச்சனைகள் வரும். வயிறு பிரச்சனைகளை பார்த்துக் கொள்வது நல்லது. 2 ஆம் குழந்தைக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மாமியார், மாமனார் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நரசிம்மர் கோயிலில் வழிபாடு செய்வது, உக்கிர நரசிம்மர் வழிபாடு செய்வது பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.












Click it and Unblock the Notifications