Magaram: மகர ராசியினருக்கு டபுள் சந்தோஷம்.. சுக்கிரன் அருளால் அடிக்கும் ஜாக்பாட்
புரட்டாசி மாத பலன்: மகரம் ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் மகரம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் கன்னி ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசிக்காரர்களுக்கு யோகாதிபதியான சுக்கிரனும், புதனும் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். சவால்களில் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டாகும். முடியாது என்கிற விஷயத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். எங்கு சென்றாலும் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். எதிரிகள் கூட உங்களிடம் தானாக வந்து பேசுவார்கள்.
திருமண யோகம்
எல்லா வகையிலும் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டு. பெரிய பதவிகள் வந்து சேரும். 6 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் 7 ஆவது வீட்டுக்குள் இருக்கும் குரு பகவானுடன் சேர்வதால் இந்த மாதம் முழுவதும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய பதவியில் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல துணை அமைவார்கள்.
வீடு, மனை யோகம்
சகோதர வகையில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வீடு, மனை வாங்குவதற்கான முன்பணம் கொடுக்கும் அமைப்பு உள்ளது. சூரியன் 9 ஆவது வீட்டில் அமர்ந்திருப்பதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அப்பா அக்கறையாக ஏதாவது சொன்னால் அதனை அலட்சியப்படுத்தாமல் கேட்டுக் கொள்வது நல்லது.
சுக்கிரன் அருள்
ராசிக்கு ஆதரவாக வெற்றியைத் தரக்கூடிய வகையில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பிடித்த நகைகள், ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். புகழ்பெற்ற கோயில்களுக்குச் செல்வதற்கான அற்புதமான அமைப்பு உள்ளது. உங்களுக்கு ஆதரவாக ராசிநாதன் சனி பகவான் இருப்பதால் வியாபாரம் இந்த மாதம் முழுக்க விறுவிறுப்பாக இருக்கும்.
வழிபாடு
உத்தியோக ஸ்தானாதிபதி வலுவாக இருப்பதால் உத்தியோகத்தில் இருந்து வந்த தொந்தரவுகள், தொல்லைகள் நீங்கும். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபாடு செய்வது சகலவித முன்னேற்றங்களைத் தரும். வாய்பேச இயலாதவர்களுக்கு நன்மையைத் தரும். உலர் திராட்சை தானமாகக் கொடுப்பது புரட்டாசி மாதத்தில் மேன்மையை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications
