புரட்டாசி மாத ராசி பலன் 2022: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..வாழ்க்கையில் திடீர் மாற்றம் வருமாம்!
சென்னை: புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னிகா மாதம் என்றும் அழைக்கப் படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுவதும் வைணவ பக்தர்கள் மாமிச உணவு அருந்தாமல் விரதம் மேற்கொள்வார்கள்..செப்டம்பர் 18ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. அக்டோபர் 17 ஆம் தேதி வரைக்கும் புரட்டாசி மாதம் உள்ளது. கன்னி ராசியில் மூன்று கிரகங்களின் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரலாம் அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் இந்த மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் வரையிலான 4 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். ரிஷப ராசியில் இருக்கும் செவ்வாய் புரட்டாசி 29ஆம் தேதி மிதுன ராசிக்கு மாறுகிறார். புதன் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். குரு மீன ராசியில் இருக்கிறார். சுக்கிரன் புரட்டாசி மாதம்7 ஏழாம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். சனி மகரத்தில் அமர்ந்திருக்கிறார். கேது துலாத்தில் இருக்கிறார். மூன்று கிரகங்களின் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு சில பாதகங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புரட்டாசி விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதம். பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும் உன்னத மாதம் புரட்டாசி.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது குடும்பத்திற்கு சுபிட்சத்தை உண்டாக்கும். சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் கொழிக்கும். துன்பம் விலகி ஓடும். புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவானை நினைத்து மனமுருக விரதம் இருந்தால் சனி தோஷம் நீங்கும். இந்த மாதத்தில் வரும் அமாவாசை மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. விண்ணுலகம் சென்ற நமது முன்னோர்கள் மண்ணுலகுக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்குகின்ற புண்ணிய காலமாகும்.

சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
என்ன பிரச்சனை வந்தாலும் கோபத்தை மட்டும் வெளிக்காட்டாதீங்க. நல்ல நண்பர்களை பிரித்து விடும். கலைத்துறையில வேலை பாக்குறவங்களுக்கு பேரும் புகழும் உண்டாகுமுங்க. அரசாங்க வேலைகள் நினைச்சபடி நடக்கும். கூடிய மட்டும் பணத்தை சேமிக்க பாருங்க. ஆத்துல போட்டாலும் அளந்து போடுறது நல்லது. தனக்கு மிஞ்சி தான் தான தருமம் என்பதை மறந்துடாதீங்க. கூட இருந்து குழி பறிக்க நினைப்பாங்க சில பேரு. அதையெல்லாம் தாண்டி தொழிலில் ஜெயிக்கணும் அப்படிங்கிற வேகத்தோட செயல்படுவீங்க. வீட்ல சுப நிகழ்ச்சிகள் நடக்குமுங்க. வீட்டை புதுப்பிக்கிற வேலையில கவனம் செலுத்துவீங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்கள் கஷ்டங்கள் பறந்தோடும்.

கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்தி வந்து சேருமுங்க. தனியார் துறை ஊழியர்களுடைய தேவை நிறைவேறுமுங்க. புத்திசாலித்தனமா பேசி சொந்தக்காரங்ககிட்ட இருந்த சண்டை சச்சரவுகளை சமாதானப்படுத்துவீங்க. ஆனா வீட்டுக்குள்ள மட்டும் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறது கஷ்டமுங்க. தொழில்ல நல்ல முன்னேற்றம் பார்ப்பீங்க. சின்ன சின்ன வியாபாரிகள் கணிசமான லாபம் அடைவார்கங்க. வாகனங்கள்ல போகும்போது எச்சரிக்கை அதிகமாக இருக்கணும்ங்க. மத்தவங்க விஷயத்தில் அனாவசியமா தலையிடாதீங்க. ஜாமீன் கையெழுத்து போடுறது ஆகவே ஆகாதுங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்கள். நிறைவான செல்வம் பெறுவீர்கள்.

துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
தொழில்துறையில திடீர் சரிவுகள் உண்டாகலாம்முங்க. குடும்பத்துல ஏற்படுற குழப்பத்தால வேலையில கவனம் செலுத்த முடியாதுங்க. நிதானமாக எந்த விஷயத்தையும் பேசி தீர்ப்பது நல்லது. வெளிநாடு பயணம் போறதுக்கான வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஐடி ஊழியர்கள் நல்ல சம்பளம் பெறுவாங்க. நில விற்பனையில மன திருப்தியான லாபம் கிடைக்குமுங்க. வளர்ச்சியை பார்த்து சொந்தக்காரங்களே பொறாம படுவாங்க. இவனுக்கு எப்படி நல்லது நடக்குதுன்னு வயிறு எரிவாங்க. அதனால அனாவசியமா செலவழிக்காதீங்க. ஆடம்பரமா நடக்காதீங்க. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்கள். சகல சௌபாக்கியங்களும் சித்திக்கும்.

விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
டீக்கடை வியாபாரிகள் கூட கணிசமான லாபம் பெறுவாங்க. வியாபாரத்தில் புதிய புதிய முறைகளை கையாளுவீங்க. இருக்கிறத வச்சு சிறப்பா செய்யணுங்குற மனநிலை உங்களுக்கு உண்டுங்க. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீங்க. அதனால உங்களோட புகழும் செல்வாக்கும் சொந்தக்காரங்க மத்தியில் சுடர் விட்டு பிரகாசிக்கும். குழப்பமா கிடந்த குடும்பத்தில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கும். கை பொருள கவனமா பாதுகாக்கிறது நல்லது. மருத்துவ செலவு வந்து சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும். பழனி முருகனின் பாதம் பணியுங்கள். கழனி செழித்து செல்வம் பெருகும்.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications