New Year Rasi Palan: புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளும் மகர ராசி.. பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மகரம் புத்தாண்டு பலன்
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அருமையான புத்தாண்டு. முழுக்க முழுக்க தெய்வ அனுக்கிரகம் இந்த ஆண்டு முழுவதும் ஏற்படும். விஐபி யோகத்தைப் பெறுவீர்கள். பெரிய விருதுகள், அங்கீகாரம், திருமண யோகம், புத்திர பாக்கியம் என அனைத்தும் கிடைக்கும். எந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடக்க வேண்டுமோ, அத்தனை விஷயங்களும் நடக்கும்.
அதிர்ஷ்டம்
3 ஆம் இடத்தில் சனி இருப்பதால் அசாத்தியமான தைரியம் ஏற்படும். 3 ஆம் இடத்தில் சனி இருப்பதால் உங்களை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. எல்லாமே உங்களால் செய்ய முடியும். எந்த விஷயத்திலும் கீழே விழுகாத நிலை ஏற்படும். உங்களுக்கு உதவுவதற்காக யாராவது காத்துக் கொண்டிருப்பார்கள். நிறைய பேருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
பதவி உயர்வு
எதிர்பாராத பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மார்பகம், கட்டி, நெஞ்சகம், இருதயம், ரத்த செல்லும் வழிகளில் பிரச்சனை போன்ற விஷயங்களில் கவனம் தேவை. பார்ட்னர்ஷிப்களில் புதிய தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். அண்ணன், தம்பிக்குள் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நல்ல நெட்வொர்க்குகள் ஏற்படும்.
திருமண யோகம்
திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை ஏற்படும். சுபகாரியங்கள் உண்டாகும். ஸ்தான பலம் நன்றாக இருப்பதால் பணவரவு உண்டாகும். எந்த எதிர்மறையான விஷயங்களும் உங்கள் மேல் வராது. உங்கள் பேச்சைக் கேட்டு ஒரு நல்ல விஷயத்தை செய்யும் நிலை ஏற்படும். ஏ கிளாஸ் யோகம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்தில் வயிறு விஷயத்தில் கவனம் தேவை.
ஜாக்பாட்
2026 ஜாக்பாட்டில் 3 வது ராசியாக நீங்கள் தான் உள்ளீர்கள். அற்புதமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதமும் நன்மைகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு, குலெதய்வ தேர்த் திருவிழாவில் கலந்துகொள்வது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications