ராகு காலம், எமகண்டம்.. குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது
ராகுகாலம் ராகுவின் ஆதிக்கம் கொண்ட நேரம், எமகண்டம் எமனின் ஆதிக்கம் உடைய நேரம் இந்த நேரத்தில் நல்லது செய்யக்கூடாது என்பது விதி.
சென்னை: நல்ல காரியம் செய்வதற்கு முன்பு நேரம் காலம் பார்த்து தொடங்கினால் அந்த காரியம் வெற்றிகரமாக முடியும். ராகு காலம், எமகண்டம், அர்த்தபிரகணன்,காலன் காலம் ஆகிய இந்த நான்கும் நால்வர் காலம். இந்த காலங்களில் நல்ல காரியம் செய்வதை பலரும் தவிர்த்து விடுவார்கள். ஏன் இந்த காலங்களில் நல்லது செய்யக்கூடாது குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
ராகுகாலம் ராகுவின் ஆதிக்கம் கொண்ட நேரம், எமகண்டம் எமனின் ஆதிக்கம் உடைய நேரம். இந்த எமன் குரு பகவானின் துணை கிரகம். இதில் ராகுகாலம் எமகண்டம் பெரும்பாலானோருக்கு தெரியும். அப்போது சுப காரியங்கள் செய்யக்கூடாது, பயணங்கள் கூடாது. புதிய பொருட்கள் வாங்குவது என எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது என அறிந்திருப்பீர்கள்.
அரத்தபிரகணன் புதனின் பார்வை பெற்ற ஒரு கோள். காலன் காலம் சூரியனின் எதிர் குணம் கொண்ட சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோள். இந்த அர்த்தபிரகணன், காலன் காலம் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அறிந்திராத ஒன்று.

என்ன செய்யக்கூடாது
அரத்தபிரகணன் என்னும் நேரத்தில் செய்யக்கூடாதவை என்ன என்றால் சுபகாரியங்கள் மட்டுமல்ல, கல்வி சம்பந்தபட்ட எந்தக் காரியமும் தொடங்கக்கூடாது. முதன்முதலான பள்ளியில் குழந்தைகளின் சேர்க்கை, உயர்கல்வியில் சேருதல், புதிய பயிற்சி வகுப்பில் சேருதல், புதிய மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்தல் போன்றவற்றை ஆரம்பிக்கக்கூடாது. காலன் காலம் காலத்திலும் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது, முக்கியமாக பயணங்கள் செய்யக்கூடாது, மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கக்கூடாது, மருந்துண்ண ஆரம்பிக்கக்கூடாது.

குளிகை நேரம் என்ன செய்யலாம்
இந்த நால்வர் காலத்தோடு இணையாமல் தனித்து இருப்பது குளிகை நேரம் மட்டுமே. இது ஏன் தனித்து இருக்கிறது? காரணம் இது சுப நேரம் என்பதால்தான். குளிகை காலத்தில் சவ அடக்கம் செய்ய சவத்தை எடுக்கக்கூடாது. குளிகை நேரத்தில் செய்யப்படும் ஒரு காரியம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். எனவே சவம் எடுப்பது குளிகை நேரமாக இருந்தால் மீண்டும் மீண்டும் அதே சம்பவம் நடக்கும் என்பதால் குளிகை நேரத்தை தவிர்ப்பார்கள்.

திருமணம் செய்யக்கூடாது
குளிகை நேரத்தில் திருமணம் செய்யக்கூடாது, பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது போன்றவைகள் செய்யக்கூடாது,அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் திருமணம் செய்கின்ற நிலை உண்டாகும். பெண் பார்ப்பது போன்றவை செய்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். எதுவும் கைகூடி வராது. ஏதாவது காரணங்களால் தள்ளிக்கோண்டே போகும்.

நல்லது நடத்தும் குளிகை காலம்
குளிகை காலத்தில் வேலையில் சேரலாம், பதவி உயர்வு பெற்று பதவி ஏற்கும் போது குளிகை நேரத்தில் பதவி ஏற்றுக்கொண்டால் மீண்டும் மீண்டும் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டே இருக்கும். வீடு கிரகப்பிரவேசம் செய்தல், நிலம் வீடு வாங்குதல், பத்திரப் பதிவு செய்தல் போன்றவை செய்யலாம். நிறைய வீடு வாங்குவீர்கள், நிலபுலங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

கடன் அடைக்கலாம்
கடன் தீரவேண்டும், மன அமைதி வேண்டும் என்று தவிப்பவர்கள், உங்கள் கடனில் சிறு பகுதியை திரும்பிச் செலுத்தினால் விரைவில் கடன் தீரும்,மன நிம்மதி உண்டாகும். குழந்தைகள்பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தல், புது வங்கிக்கணக்கு ஆரம்பித்தல், புதிய தொழில் தொடங்குதல், நிறுவனங்கள் ஆரம்பித்தல், ஆடை ஆபரணங்கள் வாங்குதல், தங்கத்தில் முதலீடு செய்தல், விவசாய அறுவடை செய்தல் போன்றவை தாராளமாகச் செய்யலாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications