ராகு கேது பெயர்ச்சி 2020 : அசுவினி முதல் ஆயில்யம் வரையிலான அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கும்
ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழ உள்ளது. இந்த கிரக இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் உள்ள அசுவினி முதல் ஆயில்யம் வரையிலான 9 நட்சத்திரங்களில் பிறந்த அரசியல் தலைவர்களுக்கு எப
சென்னை: ராகு கேது பெயர்ச்சி பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதைப் போல அரசியல் தலைவர்களும் ஆவலுடன் இந்த ராகு கேது பெயர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் அசுவினி முதல் ஆயில்யம் வரையிலான நட்சத்திரங்களில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
இராசி மண்டலத்தின் வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும் வழங்கப்படுகின்றன. ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும் பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை பாதிப்பு அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் பாதிப்பு ஏற்படும்.
அரசியல் மாற்றத்திற்கு முக்கிய காரக கிரகங்கள் ராகு-கேதுவாகும். இரவோடு இரவாக ஒரு ஆண்டி திடீரென அரசனாவதற்கும் மாடு மேய்ப்பவன் மந்திரியாவதற்கும் குப்பையில் கிடப்பவன் குபேரனாவதற்கும் காரணம் சர்ப கிரகங்களே ஆகும். யானை மாலை போட்டு அரசனாக தேர்வு செய்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த அரசியல் கட்சி தலைவர்களை அரியணையில் அமர வைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

அசுவினி
மேஷம் ராசிக்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் ராகுவும் எட்டாம் வீடான விருச்சிகத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த ராசியில் உள்ள அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்கள் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் பிரச்சினை தலைதூக்கும் சற்று கவனமுடன் செயல்படவும். தலைமையுடன் நெருக்கம் அதிகரிக்கும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

பரணி
மேஷம் ராசிக்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் ராகுவும் எட்டாம் வீடான விருச்சிகத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த ராசியில் உள்ள பரணி நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இந்த கிரகப்பெயர்ச்சியால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எந்த பிரச்சினை என்றாலும் அடக்கி வாசிக்கவும்.

கார்த்திகை
மேஷம் ரிஷபம் ராசிகளில் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சில பிரிவுகள் வரலாம், புதிய உறவுகள் தேடி வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனம் தேவை. கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவது ஆபத்தானது. அரசியல் சந்நியாசம் போக வேண்டி வந்து விடும்.

ரோகிணி
ரிஷபம் ராசியில் ராகுவும், ஏழாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரகப்பெயர்ச்சியால் ரோகிணியில் பிறந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு புதிய கூட்டணிகள் கை கொடுக்கும். புதிய முயற்சிகளை தயக்கமின்றிச் செய்யலாம். உங்களின் நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் பிரச்சினை நீங்கும்.

மிருகஷீரிடம்
மிருகஷீரிடம் அற்புதமான நட்சத்திரம். இந்த ராகு பெயர்ச்சியால் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்சித்தலைமையின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தலைமையிடம் விசுவாசமாக நடந்து கொண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவியும் பதவி உயர்வும் கிடைக்கும்.

திருவாதிரை
திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் ராகு சஞ்சரித்த சமயத்தில்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் தலைவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டது. இப்போது ராகு இடப்பெயர்ச்சியாகி ரிஷபத்திற்கு நகர்வதால் அரசியல் கட்சியினர் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். திடீர் பணவரவும் லாபமும் கிடைக்கும்.

புனர்பூசம்
ராகு கேது பெயர்ச்சி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு சில நன்மைகளை தரப்போகிறது. கட்சியின் மேலிடத்தலைவர்களின் பார்வையால் புதிய பதவிகள் தேடி வரும். நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யவும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மக்கள் செல்வாக்கு கூடும்.

பூசம்
கடகம் ராசியில் உள்ள பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மக்கள் மத்தியில் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். கட்சி தலைமையிடம் மதிப்பும் மரியாதையும் தேடி வரும்.

ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில சங்கடங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கூட்டணி விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications