ராகு கேது பெயர்ச்சி: மிதுன ராசிக்கு மாற்றங்களை அடுக்கும் பொற்காலம்.. அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி நாளை நடைபெறவுள்ளது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது மிதுனம் ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.

ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி நாளை (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

rahu-ketu-peyarchi-mithunam-will-get-good-changes

தாக்கம்

மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

போர்

போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி மிதுனம் ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ஒன்பதாம் இடத்துக்கும், கேது பகவான் மூன்றாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். ஒன்பதாம் இடம் என்பது பாக்கிய ஸ்தானம். கேது பகவான் மூன்றாம் இடத்துக்கு வருவது ஜெய ஸ்தானம். இது அற்புதமான பலன்களை கொடுக்கும். வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றி, வளர்ச்சி இருக்கும்.

ஆதாயம்

ஜென்ம குருவைப் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டாம். நீங்கள் இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் கைக்கூடும். மனதில் நினைத்த இடமாற்றங்கள் நிகழும். உங்களின் தகவல் தொடர்பால் ஆதாயம் உண்டு.

புகழ்

சமூகத்தில் பெயர், புகழ், பெருமை அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கு வலிமை ஆவீர்கள். உத்யோகம், கல்வி தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். தந்தையாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ராகு லாப ஸ்தானத்தை பார்ப்பதால் வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.

உத்யோகம்

வெளிநாடு சுற்றுலா செல்வீர்கள். உங்கள் இரண்டாவது குழந்தைக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். இரண்டாவது குழந்தையால் பெருமை ஏற்படும். சொத்தில் இருந்த வழக்குகள், வில்லங்கம் விலகும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும். உத்யோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு இருக்கும். குழந்தைகள் கல்வியில் எதிர்பார்த்த மாற்றம் இருக்கும்.

மாற்றங்கள்

அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போருக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த குறைகள் நீங்கி, மன நிறைவு ஏற்படும். தொழிலில் திட்டமிட்ட மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். பழைய சொத்துகளை விற்று, புதிய சொத்துகளை வாங்குவீர்கள். அரசு பணிக்கு முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்லும் பொற்காலம் இது.

பரிகாரம்

அலைச்சல் இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை காது, மூக்கு, தொண்டை, இதயம், கால் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு மற்றும் அருகில் உள்ள ஆஞ்சிநேயர் கோயில் சென்று வெற்றிலை மாலை அணிவித்து தரிசனம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+