ராகு கேது பெயர்ச்சி 2022: அமைதிப்பூங்காவாக மாறும் வீடு... யாருக்கு மன நிம்மதி கிடைக்கும் தெரியுமா

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகர ராசிக்காரர்களே, சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் ராகுவும் பத்தாம் வீடான தொழில் வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றனர். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் புதிய மாற்றங்கள் நிகழப்போகின்றன. வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று விரிவாகப் பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 13ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது.

18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணம் செய்கின்றனர். 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன யோகத்தைத் தரப்போகிறார்கள், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

மகர ராசிக்கு சுகமான நாட்கள்

மகர ராசிக்கு சுகமான நாட்கள்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, அசாத்திய திறமைசாலிகள் நீங்கள். பிரச்சினைகளை சாமர்த்தியமாக தீர்த்துவிடுவீர்கள். மனநிம்மதி அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். ஏழரை சனியின் பிடியில் சிக்கியுள்ளதால் கலகமும் போர் பதற்றமுமாக இருந்த வீடு ராகுவின் இடமாற்றத்தால் இனி அமைதிப்பூங்காவாக மாறப்போகிறது.

குடும்பத்தில் குழப்பம் நீங்கும்

குடும்பத்தில் குழப்பம் நீங்கும்

உங்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல் நீங்கி சுகமான நாட்களாக மாறப்போகிறது. கசப்பான நாட்கள் மாறி இனி தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரப்போகிறது. பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.

திடீர் மருத்துவ செலவுகள்

திடீர் மருத்துவ செலவுகள்

நான்காம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவினால் அம்மாவிற்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அம்மா வழி உறவினர்களால் சில சிக்கல்கள் வரும். திடீர் கருத்து மோதல்கள் வரலாம். சிலருக்கு இடமாற்ற்ம உண்டாகும். பணத்தட்டுபாடுகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் சென்று வருவீர்கள்.

 கேது கொடுக்கும் நற்பலன்கள்

கேது கொடுக்கும் நற்பலன்கள்

பத்தாம் வீட்டில் கேது பயணம் செய்கிறார். வேலையில் திறமை பளிச்சிடும். அலுவலகத்தில் புரமோசன் கிடைக்கும். உயரதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளைப் பற்றி விமர்சித்து பேசுவதை தவிர்க்கவும். கூடுதல் சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

பாராட்டு பரிசு கிடைக்கும்

பாராட்டு பரிசு கிடைக்கும்

அலுவலகத்தில் பாராட்டும் பரிசும் கிடைக்கும். வீடு நிலம் வாங்கலாம். சகோதரர்கள் கூட்டு விசேசங்களில் பங்கேற்பீர்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய அளவில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+