ராகு கேது பெயர்ச்சி 2023: திடீர் பணக்காரன் ஆகும் யோகம்..ராகு திசையில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்?
சென்னை: நவ கிரகங்களில் நிழல் கிரகமான ராகு பகவான் ஒருவருக்கு வருமானத்தை அள்ளிக்கொடுப்பார். ஒருவருக்கு திடீரென்று ராஜயோகம் வரும் வருமானம் அள்ளி கொட்டும். பணத்தை எண்ணி வைக்க இடமிருக்காது அந்த அளவிற்கு வரும் அதற்குக் காரணம் அவருக்கு ராகு தசை வந்திருக்கும். திடீர் பணவரவு எதிர்பாராத யோகத்திற்கு சொந்தக்காரர் ராகுதான். ராகு திசை ஒருவருக்கு 18 ஆண்டுகள் நடைபெறும். இந்த 18 ஆண்டுகளில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவரை மிகப்பெரிய செல்வந்தராக மாறுவார். குப்பை மேட்டில் இருப்பவரைக் கூட கோபுரத்தில் அமரவைப்பார். அந்த அளவிற்கு ராகு கொட்டிக்கொடுப்பார்.
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக ராகு கேது பெயர்ச்சியை மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். காரணம் ராகு கேது ஒருவரின் ராசியில் ஒன்றரை ஆண்டுகள் நின்று பலனைக் கொடுக்கும். ராகுவைப் போல கொடுப்பாருமில்லை... கேதுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள். ராகு எதைக் கொடுத்தாலும் அள்ளிக் கொடுப்பார். அதே நேரத்தில் ராகு பலமிழந்து இருந்தால் எதற்கெடுத்தாலும் தடையை ஏற்படுத்துவார். திருமண தடை, குழந்தை பாக்கியத்தில் தடை, வசதி வாய்ப்பில் தடையை ஏற்படுத்துவார். ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. ராகு தசை நடந்தால் என்ன பலன் எந்த லக்னகாரர்களுக்கு நல்லது என்று பார்க்கலாம்.

திருமணம், குழந்தை பாக்கியம் தடை ஏற்பட காரணம் ராகு கேது கிரகங்கள்தான். சர்ப்ப தோஷம் இருந்தால் திருமண தடை, குழந்தை பாக்கிய தடை ஏற்படும். ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் வேலை செய்வார். ராகு ஒருவரின் ஜாதகத்தில் சுப கிரகங்களுடன் இருந்தால் சுப பலன்களை தருவர். அதே நேரத்தில் செவ்வாய், சனி தொடர்பு ஏற்படும் போது சாதகமற்ற பலனை தருவார்.
ராகு பிரம்மிக்கத் தக்க கிரகம். கொடுப்பவரும் அவரே தடுப்பவரும் அவரே அவரை புரிஞ்சுக்கவே முடியாது. மேஷம் விருச்சிகம், தனுசு மீனம், கடகம் சிம்மம், ஆகிய ஆறு லக்னங்களுக்கு சாதகமான பலன்களை தருவதில்லை. அவர் நல்லது செய்ய வேண்டுமெனில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ராகு ஆகிய வீடுகளில் இருக்கும் ராகு நல்லதை செய்வார். தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல ராகு செயல்படுவார்.
ராகு திசை ராஜயோகங்களில் முதன்மையானது ராகு மிகச்சிக்கலான காலகட்டத்தில்தான் கெடுதல் செய்வார். சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களில் லக்னகங்களான ரிஷபம், துலாம்,மிதுனம்,கன்னி, மகரம், கும்பம் சனியின் நண்பர்களான சுக்கிரன், புதன் லக்னங்களுக்கு ராகு திசை நல்லது செய்யும் கெடுதல் செய்யாது.
சுபத்துவமான ராகு ஒருவருக்கு ராஜயோகத்தை அள்ளித்தருபவர். ஒருவருக்கு ராகு பலன் தர வேண்டும் என்றால் இயற்கை சுபரின் வீட்டில் இருக்க வேண்டும். திடீர் பிரபலம் ராகுவினால் நடக்கும். சினிமா, அரசியல் என பிரபலம் அடைய ராகுதான் காரணம். குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் வீட்டில் அமரும் போது அவர்களின் காரகத்தை செய்வார்.
மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஐந்து இடங்களில் இருக்கும் ராகு சுயமான நன்மை செய்வார். சுபர் தொடர்பு இருந்தால் மேன்மையான பலன் கிடைக்கும். ராகுவை குரு பகவான் பார்த்தால் அவர் கெடுதல் செய்ய மாட்டார். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருக்கும் ராகு பலமற்ற நிலையில் இருந்தால் சில நேரங்களில் கெடுதல் செய்யும். வம்பு வழக்கு நோய் கடன் போன்ற பலன்களை கொடுப்பார். ராகுவிற்கு இடம் கொடுத்தவர் வலிமை பெற்றால் ஆட்சி உச்சமாக இருந்தால் அளப்பறிய நன்மைகளை செய்வார் ராகு. தர்ம கர்மாதி எனப்படும் ஒன்பது பத்து இடங்களில் இடங்களில் இருந்தால் சாரம் பெற்று அமர்ந்தால் அம்சமான பலன்களை கொடுப்பார்.
ஒருவருக்கு ராகு திசை நடந்தால் கடல்கடந்து வெளியே செல்லுதல். வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார். வெளிமாநிலம் போய் பொருள் தேட வைப்பார். புத்திசாலித்தனமான தன லாபத்தை தருவார். உங்களுக்கு வருமானத்தை கொட்டுவார். அந்த அளவிற்கு கொடுத்து உங்களை திக்கு முக்காட வைப்பார். நல்லவன் கெட்டவன் என்று ராகு பார்ப்பதில்லை. பூர்வ புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் எந்த வயதில் அனுபவிக்கப் போகிறீர்கள் என்று உணர்த்துபவர் ராகுதான். பணம் கூரையை பிச்சிச்கொண்டு கொட்டும் என்று சொல்வது அவருக்கு சரியாக இருக்கும்.
பிறந்த ஜாதகத்தில் ராகு பலமான இடத்தில் அமர்ந்து சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்றிருந்தால் குழந்தை பருவத்தில் ராகு திசை நடந்தால் உற்சாகமாக இருப்பார்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாகவும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள். உயர்கல்வி யோகம் அமையும். மத்திம வயதில் ராகு திசை நடந்தால் பணவருமானம் அதிகரிக்கும் கொடுக்கும் ராகு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுப்பார். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பஞ்சனையில் படுக்கும் வாய்ப்பை ராகு தருவார். திடீர் புகழையும் ராஜ யோகத்தையும் கொடுத்து திக்குமுக்காட வைப்பார்.
ராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புக்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத தனசேர்க்கைகள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
ராகுபகவான் ஒருவரின் ஜாதகத்தில் பலமிழந்து தீயவர்களின் சேர்க்கை பெற்று இருந்தால் இருந்தால் குழந்தை பருவத்தில் ராகு திசை நடைபெற்றால் உடல் நல பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களுக்கு உடல்நலம் பாதிக்கும். கல்வியில் தடையும், தீயவர்களின் நட்பும் ஏற்படும். சிலருக்கு திருமண தடையும் அவப்பெயரும் ஏற்படும். முதிய பருவத்தில் நடந்தால் உண்ணும் உணவே விஷமாகும்.
ஜாதகத்தில் 6ஆம் வீடு 8 வீடுகளில் சனி செவ்வாய் இருந்து ராகு திசை நடக்கும் காலங்களில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஒருமுறை காளஹஸ்தி சென்று காளத்திநாதரையும் அன்னை ஞானபிரசன்னாம்பிகையை தரிசனம் செய்து வரலாம். ராகு பரிகார தலங்கள் எத்தனையோ தமிழ்நாட்டில் இருந்தாலும் இங்கு ராகு கேதுவாக இறைவனும் இறைவியும் எழுந்தருளுவதால் மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது.
கும்பகோணம் நாகநாதர், திருநாகேசுவரம் நாகநாதர், திருமருதூரில் குடிகொண்டுள்ள நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நாகை நாகதாதர், திருப்பாம்புரம், திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோயில் நாகமலை என்னும் திருச்செங்கோடு, திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என பல ஆலயங்கள் ராகு கேது பரிகாரத்தலங்களாக உள்ளன. ராகு திசை நடைபெறும் காலத்தில் இந்த தலங்களுக்கு சென்று வழிபட்டு வரலாம். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications