ராகு கேது பெயர்ச்சியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.. ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: உலக மக்கள் எதிர்பார்த்த சனிப்பெயர்ச்சி கடந்த மாதம் முடிந்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்பார்த்த தமிழ் புத்தாண்டு கடந்த வாரம் பிறந்துள்ளது. விரைவில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராகு கேது பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது

ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழும். அதன்படி இந்த வருடம் ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. திருக்கணிதப்படி மே 18 ஆம் தேதியும், வாக்கிய பஞ்சாங்க படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. பொதுவாக மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகர்ந்தாலும் ராகு கேது மட்டும் பின்னோக்கி நகரும். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்

rahu-ketu-peyarchi-these-4-zodiac-signs-should-be-careful

பாதிப்புகள்

சனியுடன் ராகு இருப்பதால் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமியால் ஏதாவது நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. அது பெரியளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. கேது பகவானால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.

கடகம்

கடகம் ராசிக்கு அஷ்டம சனி முடிந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். ராகு எட்டாம் இடத்துக்கும், கேது இரண்டாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. மன அழுத்தம் ஏற்படும். குடும்ப உறவுகளில் கருத்து வேறுபாடு, மோதல்கள் உருவாகும். குடும்ப விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது. குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை.

தடை

ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பெண்களாக இருந்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். காரியங்களில் தடங்கல்கள் உருவாகும். முக்கியமாக சுப காரிய தடைகள் ஏற்படும். உத்யோகம் தொடர்பாக பணி மாறுதலால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழல் ஏற்படும்.

சிம்மம்

சிம்மம் ராசிக்கு ராகு பகவான் ஏழாம் இடத்திலும், கேது பகவான் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர். ஏற்கனவே அஷ்டம சனியும் நடந்து வருகிறது. அதனால் இந்த அமைப்பு அவ்வளவு நல்ல பலன்களை கொடுக்காது. ராகு ஏழாம் இடத்தில் இருப்பதால் திருமணத் தடைகள் ஏற்படும். மாமனார், மாமியாரால் வாழ்க்கை துணையுடன் மனக்கசப்பு ஏற்படும்.

குழப்பம்

உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். நரம்பு, கால், பாதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். மனதை ஒரு நிலை படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

மகரம்

மகரம், ராசிக்கு ராகு பகவான் இரண்டாம் இடத்திலும், கேது பகவான் எட்டாம் இடத்திலும் பெயர்ச்சி ஆகிறார்கள். வார்த்தைகளை கவனமாக உதிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கழுத்து, முதுகு, எலும்பு, கால் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக அக்கறை தேவை. எனவே உடற்பயிற்சி மிகவும் அவசியம். வாகனம் இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை.

குடும்பம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப உறவுகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.

கும்பம்

கும்பம் ராசிக்கு ராகு பகவான் ஜென்ம ராசிக்கும், கேது பகவான் ஆறாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உத்யோகம், தொழிலில் சின்ன தடைகள், சிக்கல்கள் உருவாகும். மனதில் சோர்வு ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

பணம்

பணம் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் நகர்வுகளை ரகசியமாக பாதுகாக்க வேண்டும். கடகம், சிம்மம், மகரம், கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்களுமே அமாவாசை தினத்தில் அருகில் உள்ள புற்று கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் தடைகள் குறைந்து நற்பலன்கள் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+