"காசு பணம் துட்டு மணி மணி".. மிதுன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழிலில் முன்னேற்றம்
Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்கும் பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தங்க ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும். யோக பலன்களும், நிம்மதியும் கிடைக்கும்.
கவனம்
கழுத்து, தொண்டை, கைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் சென்று வருவது நல்லது. நகை காணாமல் போவது, பின்னர் கிடைப்பது போன்ற அமைப்பு உண்டாகும். விரயத்தில் செவ்வாய் இருப்பதால் மனைவியின் ஆரோக்கியம், கால் பாதத்தில் கவனம் தேவை. ஆண்கள் இரவு நேர பயணத்தில், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அனுகூலம்
பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலமாக அனுகூலம் உண்டாகும். கடன் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். இனிமையான சூழ்நிலை உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இயற்கையாக இருந்த சங்கடங்கள் எல்லாம் நிவரத்தியாகும். பெரிய சந்தோஷங்கள் ஏற்படும். உத்தியோகம், வியாபாரம் ரீதியாக பெரிய நம்பிக்கை ஏற்படும். இனிமையான வசந்தங்கள் ஏற்படும் காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.
வழிபாடு
திட்டமிட்ட காரியங்களில் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். வாரத்தின் இறுதிப் பகுதியில் பயணங்களில் கவனம் தேவை. பண வரவு நன்றாக இருக்கும், பிடித்த நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டு. நினைத்த காரியங்கள் நடக்கும் அமைப்பு உள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். கிருஷ்ணர், குரு வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
