Viruchigam: விருச்சிக ராசி கம்முனு உம்முனு இருப்பது நல்லது.. ஆடி 17க்கு பிறகு வரும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-viruchigam-rasi-people-will-get-massive-growth-in-this-week

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் ஆடி மாதம் முழுவதும் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்றிருப்பது நல்லது. ஆவணி மாதத்தில் இருந்து எல்லா சுப காரியங்களும் அடுத்தடுத்து நடக்கும். குருவின் பார்வை 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வரும். பிள்ளைகள் விஷயத்தில் தடைகள் தவிடு பொடியாகும்.

நல்ல செய்திகள்

லாபம், அனுகூலம், சந்தோஷம் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகம், தொழில் ரீதியாக தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கவனம்

இந்த வாரத்தில் 24, 25 ஆகிய 2 நாட்கள் கவலை அளிக்கும் விதமாக இருக்கலாம். டென்ஷனாவது, அதீத செலவு செய்வது, அவசரப்பட்டு சில முடிவுகளை எடுத்துவிட்டு தேவையில்லாமல் செய்துவிட்டோமோ என்ற எண்ணம் வருவதற்கான வாய்ப்புள்ளது. அஷ்டமத்தில் புதன் அமர்ந்திருப்பதால் தோல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம்

அடிவயிறு, கழிவுப் பாதைகள், கழுத்து, இடதுபக்கம் போன்ற விஷயத்தில் கவனம் தேவை. அலர்ஜி, சளி தொந்தரவில் கவனம் தேவை. மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. உறவுகள் மற்றும் அண்டை அயலாரிடம் வாக்குவாதம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிறைய பாசிட்டிவ் சிக்னல்கள் கிடைக்கும்.

முன்னேற்றம்

ஆடி 17 ஆம் தேதிக்குப் பிறகு பெரிய மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். அப்பாவின் சொத்து, அப்பாவின் பணம் வந்து சேருவதற்கான வாய்ப்புள்ளது. எல்லாவிதமான செளகரியங்களும் வந்து சேருவதற்கான வாய்ப்புள்ளது. களத்திர ஸ்தானம், 7 ஆம் இடம் வலிமையின்றி காணப்படுவதால் மனைவியின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

மூக்கு, வாய் பகுதிகளில் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது. வேலை அழுத்தம், வேலையில் அதீத பளுவுடன் இருப்பவர்கள், வேலை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் வேலை மாற்றம் செய்வதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சந்தோஷம் 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 70 சதவீதமும் நன்றாக இருக்கும். திருச்செந்தூர் முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+