Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தடைகள் தவிடுபொடியாகும் காலம்.. என்ஜாய்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு கண்டிப்பாக வெளியூர், வெளிநாடு பயணம் உண்டாகும். லண்டன், நியூசிலாந்து செல்வதற்கான வாய்ப்பு அடுத்த ஒரு மாதத்துக்குள் நடந்தே தீரும். மிகப்பெரிய சந்தோஷம் ஏற்படும். நல்ல பொருளாதார ஏற்றம், பெரிய விஷயங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும். சாதனை புரியும் காலகட்டமாக இருக்கும்.
தன்னம்பிக்கை
மற்றவர்கள் செய்ய முடியாத விஷயங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரமாக இருக்கும். எதிர்மறையான காலகட்டங்கள் எல்லாம் நிறைவடைந்துவிட்டன. உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை அடைவீர்கள். மன நிறைவு பெறும் காலகட்டம். தேவைக்கு அதிகமாகவே அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். உங்களுடைய உழைப்பால் அபரிமிதமான பலன்களைப் பெறுவீர்கள்.
யோகம்
டாப் கிளாஸான நேரமாக உள்ளது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதம் நன்மையை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சுப விரைய பிராப்தம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
தடைகள் நீங்கும்
உத்தியோகம் ரீதியாகவும், வியாபாரம் ரீதியாகவும், தொழில், படிப்பு ரீதியாகவும் இருந்த மனத் தாங்கல்கள், அவமானம், சங்கடங்களில் இருந்து நிவர்த்தி ஏற்படும். இளம் வயது சார்ந்தவர்களுக்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். மகிச்சி பெருகும். அற்புதமான மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமையும்.
வழிபாடு
பெருமாள் கோயிலில் வழிபாடு செய்வது, பெருமாள் கோயில், பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். மாற்றமும், முன்னேற்றமும் நிறைந்த வாரமாக உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications