ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்.. கடக ராசிக்கு வேலை, திருமணம், வீடு என அடுத்தடுத்து யோகம்
Rasi palan this week: செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடகம் ராசியினர் வீட்டிற்குத் தேவையான இன்டீரியர் டெக்கரேஷன் செய்வது, சோஃபா வாங்குவது போன்ற ஆடம்பரமான விஷயங்களைச் செய்வீர்கள். திருமண யோகம் உண்டாகும். வீடு முழுக்க சொந்தபந்தங்கள் இருக்கும் அமைப்பு. வெளியூர் செல்லும் வாய்ப்புள்ளது. தோட்டங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். முயற்சிகள் தள்ளிப்போனாலும் நிச்சயம் வெற்றி பெறும்.
புதிய வேலை
30 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக வேலை கிடைக்கும். வாரத்தின் இறுதிப் பகுதியில் சுப விரயம் உண்டாகும். வண்டி வாகனங்கள் மாற்றுவீர்கள். அல்லது வண்டி வாகனங்களுக்கு செலவு செய்வீர்கள். பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. முக்கியமான முடிவுகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக முடியும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
அனுகூலம்
பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்திற்கு தேவையான பணத்தை கொடுத்து மகிழ்வீர்கள். துணையிடம் கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் உடனிருப்பவர்கள், கூட்டாளிகள் சில பிரச்சனைகள் செய்யும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீதமான கவனம் தேவை. வேற்று மொழி மனிதர்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும். உறவுகளுக்குள் தேவையில்லாத கமிட்மெண்டுகளை வைத்துக் கொள்வது பெரும் சிக்கலையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
வழிபாடு
இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். புதிய முயற்சிகள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும். லட்சுமி நாராயணர் வழிபாடு சகலவித முன்னேற்றங்களைத் தரும்.


Click it and Unblock the Notifications
