கடக ராசிக்கு குரு, செவ்வாயின் அருளால் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-from-sep-21-to-27

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்

கடக ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு முக்கியமான காலகட்டமாக இருக்கும். ராசியில் இருக்கும் செவ்வாய், குரு அரசியல் யோகத்தைக் கொடுப்பார். சொந்த வீடு யோகம் உண்டாகும். கிரஹப் பிரவேசம் செய்வீர்கள். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அயல்நாடுகளில் முதலீடுகளைச் செய்யும் அமைப்பு உள்ளது. வெளியூரில் இருப்பவர்களுக்கு இந்தியாவில் வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வீடு வாங்கும் யோகம்

வண்டி, வாகனத்தில் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கழுத்து, தொண்டை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வந்து செல்லும். நீச்சம் பெறக்கூடிய செவ்வாயாக இருப்பதால் அடைப்பு போன்றவை கண்டறிவதற்கான வாய்ப்பு ஏற்படும். வீடு வாங்குவது, சொத்து வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். திருமண யோகம் ஏற்படும்.

ஆரோக்கியம்

பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக சில வாக்குவாதங்கள் ஏற்படும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அனுகூலங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம்.

சிக்கல் நீங்கும்

உத்தியோகம், தொழில், பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் நீங்கும். வியாழக்கிழமை தோறும் பசுமாடுகளுக்கு உணவளிப்பது நன்மைகள் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. கையெழுத்திடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்து கையெழுத்திடுவது நன்மை பயக்கும்.

வழிபாடு

வெளியிடத்தில், தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் பேச்சைக் கேட்டு செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையேயான பிரச்சனைகள் சரியாகும். பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி, பகிர்ந்துகொள்வது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் உண்டாகும். முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+