Rasi palan this week: கடக ராசிக்கு ஆடம்பர யோகம்.. சொந்த வீடு, வாகனம்னு ஜம்முனு மாறும் யோகம்
Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடகம் ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் கைகூடும். தள்ளிப்போன விஷயங்களை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வேகமாக செயல்படுவீர்கள். 4 ஆம் இடத்தில் சுக்கிரன், 3 ஆம் இடத்தில் புதன் அமர்ந்திருப்பதால் ரெஜிஸ்டிரேஷன் செய்வீர்கள். வீடு கட்டத் தொடங்குவீர்கள். ஆடம்பரமான பொருள்களை வாங்கிப் போடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் போன்றவற்றை வாங்குவீர்கள்.
வெற்றி மேல் வெற்றி
எழுத்து, ஓவியம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் போன்றவை கிடைக்கும். புதிதாக வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மன வலிமையோடு வெற்றி பெற்று சாதிப்பீர்கள். அன்புக்குரியவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்வீர்கள். முக்கியமாக எடுக்கும் முடிவுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
இடமாற்றம்
எந்த விஷயத்துக்காகவும் கவலைப்படத் தேவையில்லை. தேவையில்லாமல் டென்ஷன் ஆவதைத் தவிர்ப்பது நல்லது. எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். இடமாற்றத்துக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக நடக்கும். கழுத்து சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வந்து சரியாகும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
சிக்கல் தீரும்
பெற்றோர், பெரியோருடன் இணக்கமாக, பாசமாக இருப்பது நல்லது. உறவுகளுக்குள் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவைில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பம், வெளியிடம், அரசியல், தொழிலில் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. மறைமுக நோய்கள், மறைமுக எதிரிகள் பாதிப்புகள் தலைதூக்கும் காலகட்டம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. புதன்கிழமைகளில் மதிய வேளை உணவு தானம் அளிப்பது நன்மையைத் தரும். கணபதி வழிபாடு மகான்கள் வழிபாடு யோக பலத்தை பெற்றுத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்


Click it and Unblock the Notifications
