மகரம் ராசிக்கு 3 விஷயத்தில் நிச்சயம் வரப்போகும் அதிர்ஷ்டம்.. இதில் மட்டும் ரொம்ப கவனம்
Rasi palan this week: செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு இந்த வாரத்தில் நிலம் அமையும் வாய்ப்புள்ளது. தைரியம் பிறக்கும். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொழிலில் எடுக்கக்கூடிய முடிவுகளில் சாதிக்கும் அமைப்பு உள்ளது. தொழிலில் நல்ல மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
எந்தவொரு வழக்குகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கொழுப்பு தொடர்பாந பாதிப்புகளில் கவனம் தேவை. வேலையில் பெரிய மாற்றம், முக்கியமான விஷயங்கள் சாதகமாக நடக்கும். பொறுப்புகள் கூடும். நல்ல வேலை கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திங்கள்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
அனுகூலம்
குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் குடும்ப விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. ஏழைகளுக்கு உணவு தானம் கொடுப்பது நன்மையையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். எல்லா விஷயங்களிலும் அனுகூலமும் ஏற்படும். கணவர் மனைவியின் உடல் நலனிலும், மனைவி கணவரின் உடல்நிலையிலும் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும்.
முன்னேற்றம்
உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு என எல்லா விஷயங்களிலும் முன்னேற்றம் காணப்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரிய சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். நரம்பு, ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், ஹார்மோன் தொடர்பான பாதிப்புகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும்.
யோகம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பலவிதமாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். செல்வாக்கு பெறக்கூடிய காலகட்டம். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் யோகம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். சரஸ்வதி தேவி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
