Rasi palan this week: மேஷ ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி.. இந்த விஷயத்தில் கவனம்
Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசியினருக்கு துணையுடன் மனஸ்தாபம், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பொறுமையாக இருப்பது நல்லது. சுக்கிரன் துலாம் ராசியில் இருப்பதால் துணைக்கு உங்கள் மேல் கோபமோ, வன்மமோ ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மையைத் தரும். கோபப்படுவது தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
சிக்கல் தீரும்
புதிய முதலீடுகளை செய்வீர்கள். தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் செய்வோருக்கு நல்ல வளர்ச்சி காணக்கூடிய காலகட்டம். தனிப்பட்ட செல்வாக்கு பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும்.
யோகம்
விட்டுக் கொடுத்துச் செல்வது ஏற்றத்தைத் தரும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக புதிய புதிய முதலீடுகளை செய்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். செல்வாக்குகள் கூடும். வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். வயிறு, மன அழுத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நரசிம்மர் கவசம் கேட்பது நன்மையைத் தரும்.


Click it and Unblock the Notifications
