இந்த வாரம் யாருக்கு ஜாக்பாட்?.. யாருக்கு எச்சரிக்கை?.. மேஷம் முதல் மீனம் வரை வார ராசி பலன்
Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசியினருக்கு எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் அற்புதமான காலகட்டம். சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் அபிவிருத்தி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் விஷயத்தில் நிறைய ஏற்றங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக ஏற்றம் பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அரசுத் துறையில் அனுகூலம் ஏற்படும். அரசு வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தடைகள் தவிடு பொடியாகும். கணவன், மனைவி இருவரும் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியினருக்கு வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வாக்கு கொடுத்து அதை நிறைவேற்றுவதற்காக எதையாவது செய்து சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். குடும்பத்திலும், வெளியிடத்திலும் வார்த்தைகளில் மட்டும் அதீத கவனமாக இருக்க வேண்டும். பசு மாடுகளுக்கு உணவளிப்பது சனி வக்கிரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தீரும். தொழில் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, மூட்டுவலி, சளி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.
கடக ராசி பலன்
கடக ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை, அசாத்தியமான வலிமை உண்டாகும். நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். காதல் கைகூடும். பணம், பொருளின் மேல் ஆசை அதிகரிக்கும். காதல் திருமணம் நடக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
மேலதிகாரிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கோபத்தை தவிர்த்து இணக்கமாகச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். துணை விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். உறவுகளில் மேன்மை, சந்தோஷம் ஏற்படும். எல்லா விதமான சந்தோஷங்களும் கிடைக்கும். உத்தியோக ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு விரயங்கள் அதிகமாக இருப்பதால் எல்லா பொருள்களிலும் கவனமாக இருக்க வேண்டும். சுபவிரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம்.
கொடுத்த வாக்கை வீட்டிலும்,வெளியிடத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். வண்டி, வாகனத்தில் புதிய மாற்றங்களை, புதிய விஷயங்களை செய்வீர்கள். புதிய படிப்புகளை படிப்பீர்கள். புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். கணவன், மனைவியின் அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். வசந்தம் பிறக்கும் காலகட்டமாக இருக்கும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தொழில் ரீதியாக நிறைய அற்புதங்கள் ஏற்படும். வியாபாரம், படிப்பு, தொழில், உத்தியோகம் சரியாக இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நன்மைகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய அமைப்பு.
அந்தரங்க விஷயங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் அற்புதமும், ஆனந்தமும் ஏற்படும். துணை விஷயத்தில் கோபப்படாமல் இணக்கமாகச் செல்வது நல்லது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் அமைப்பு ஏற்படும். ஜாயிண்டு பெயின், முதுகு வலி, கால்சியம் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியினருக்கு உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவித நல்ல மாற்றங்களும் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும்.
யோகத்தை அதிகமாகப் பெற்றுத் தரக்கூடிய நல்ல காலகட்டம். புதிய தொழில், புதிய விஷயங்கள், புதிய படிப்புகள் போன்றவை ஏற்படும். வண்டி வாகனங்களை வாங்கும் அமைப்பு உள்ளது. வீடு கட்டும் யோகம் உண்டாகும். நிலம் வாங்குவது மன அழுத்தத்தை தீர்க்கும். துணை விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் யோக பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் ஆடி மாதம் முழுவதும் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்றிருப்பது நல்லது. ஆவணி மாதத்தில் இருந்து எல்லா சுப காரியங்களும் அடுத்தடுத்து நடக்கும். குருவின் பார்வை 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வரும். பிள்ளைகள் விஷயத்தில் தடைகள் தவிடு பொடியாகும்.
லாபம், அனுகூலம், சந்தோஷம் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகம், தொழில் ரீதியாக தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியினர் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நண்பர்களால், மனைவியால் வாழும் அமைப்பு உள்ளது. பெரிய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், முதுகுத் தண்டுவடத்தில் சதை போன்று வளருவது போன்ற அமைப்பு உள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் கேது இருப்பது வெளியூர், வெளிநாடு செல்வது, தூரதேச பயணம், இன்ப சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும்.
தேவையில்லாத நட்பு, சகவாசம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண்ணின் சாபம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. சூழ்நிலை நம்பிக்கை தந்தாலும் இறுதியில் சிக்கலில் சிக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். நரம்பு, தலைவலி, பிரஷர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கழிவுப் பாதை, வயிறு, அடிவயிறு, பின்புறப் பகுதிகளில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியினர் குடும்பத்தில் துணை விஷயத்தில் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி உடல்நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். படபடப்பு, பிரஷர், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். புதன்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு தானமாகக் கொடுப்பது தடைகள் எல்லாமே தவிடு பொடியாகும். குடும்பத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். 8 ஆம் இடத்தில் கேது இருப்பதால் பொறுமையாக வாகனங்களை ஓட்டுவது நல்லது. வேகமாக செல்வது, செல்போன் பேசிக் கொண்டே செல்வதை தவிர்ப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருப்பது அற்புதமான யோகத்தைத் தரும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். கிரியேட்டிவிட்டி அதிகரிக்கும். நட்பின் மூலமாக லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். கைமாற்றி விடும் யோகம் உண்டாகும். பேப்பர், புத்தகம், கணிதம், எழுத்து, ஓவியம் என எல்லா விஷயத்திலும் முதலிடத்தில் இருப்பீர்கள்.
பிள்ளைகளால் சந்தோஷம், ஏற்றம் ஏற்படும். வெளியூர் யோகம் கிடைக்கும். நிலம் வாங்கும், விற்கும் யோகம் உண்டாகும், நிலத்தை விற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விற்கும் யோகம் உண்டாகும். வேலையில் அதீத பளு ஏற்படும். 10 நாட்களுக்குப் பிறகு எல்லா பிரச்சனைகள் நீங்கும். பகை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 22, 23, 24 ஆம் தேதிகளில் அற்புதமான ஏற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசியினர் பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். செவ்வாய்க்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தைத் தரும்.
வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளைப் பார்த்துக் கொள்வது நல்லது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து வித நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். அனுகூலம் ஏற்படும். நிலம், விவசாயம், கால்நடை சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆதாயம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
