Rasi palan this week: ரிஷப ராசிக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்.. வழக்கு சாதகம், பணவரவு அமோகம்!

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-people-from-sep-21-to-27

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல்

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மிக முக்கியமான காலகட்டம். கோர்ட், கேஸ், அலவலகத்தில் இருக்கும் பிரச்சனைகள், மாற்றங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லா நல்லவித முன்னேற்றங்களும் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயித்துக் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்குள் இடையூறுகள், டென்ஷன்கள் வரும் வாய்ப்புள்ளது. இளைய சகோதரன், சகோதரிகளுக்கு இடையே பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

வழக்கு சாதகம்

செவ்வாய், குரு இணைவதால் ராஜ உறுப்புகளான இதயம், மூளை தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் வந்து நிவர்த்தியாகும். வீட்டை விட்டு, ஊரை விட்டு வேலை உள்ளிட்ட காரணங்களால் பிரிந்திருப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டக்கூடிய காலகட்டம்.

யோகம்

எல்லா விதத்திலும் யோகம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மை தரும். குடும்பத்தில் துணையுடன் மனம் விட்டுப் பேசுவது, இணக்கமாகச் செல்வது நல்லது. பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

பணவரவு

தாய், தந்தைகளுக்கு செய்ய வேண்டிய விஷயங்களில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேறறம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். பண வரவு அற்புதமாக இருக்கும். மனதில் தெளிவும், சந்தோஷமும் ஏற்படும். செவ்வாய் நீச்சமாக இருப்பதால் காதல் அமைப்பிலும், குடும்ப அமைப்பிலும் கவனமாக இருப்பது நல்லது.

வழிபாடு

வெளியிடம், தொழில், உத்தியோகம், மீடியா துறையில் இருப்பவர்கள், கலைஞர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். அயிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. எதிரிகள் விஷயத்தில் வெற்றி ஏற்படும். சுபகாரியத் தடைகள் பரிபூரண நிவர்த்தியாகும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்மையைத் தரும். மகாலட்சுமி தேவி வழிபாடு ஏற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+