Rasi palan this week: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. பேச்சில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-people-from-sep-7-to-13

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். சுப காரியங்களில் இருந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளிடம் கோபம் காட்டுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.

சிக்கல் தீரும்

நீண்ட நாட்களுக்குப் பிறகு அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் ஏற்படும். நம்பிக்கை தரக்கூடிய நல்ல விஷயங்கள் நடக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். பெரும் வெற்றிகள் ஏற்படக்கூடிய காலகட்டம். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உறவுகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

முன்னேற்றம்

5 ஆம் இடத்தில் புதன் அமர்ந்திருப்பதால் அழகு, ஆடம்பரம் அதிகரிக்கும். தலைமைத்துவத் திறன் அதிகரிக்கும். புதிய கோர்ஸ்களை படிப்பீர்கள். பெரிய அளவுக்கு பணம் வந்து சேரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வண்டி வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கடனை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும்.

வழிபாடு

பேச்சில் மிகுந்த கவனம் தேவை. உஷ்ணம் காரணமாக வாய், மூக்கில் கொப்பளங்கள் வரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கழிவுப் பாதையில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

85 சதவீதம்

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொட்ட காரியங்கள் துலங்கக்கூடிய அற்புதமான நேரம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+