பட்ட கஷ்டத்துக்கு இனிமேல் தான் இருக்கு சம்பவம்.. கன்னி ராசிக்கு ஜாக்பாட் வாரம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-kanni-people-get-from-november-15-to-22

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. துணை விஷயத்தில் இணக்கமாகவும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது. கோபப்படுவது, சண்டை போடுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

மாற்றம், முன்னேற்றம்

இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். சுப விரயங்கள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். ஆனால், சந்தோஷ செலவுகளாக இருக்கும். வண்டி மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் ஏற்படும்.

செல்வாக்கு கூடும்

வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த சம்பள உயர்வுகள் எல்லாம் மாறி விரைவில் சம்பள உயர்வு கிடைக்கும். ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும். சங்கடங்கள், பாதிப்புகள் எல்லாம் நீங்கும். பெரும் செல்வாக்கைப் பெறக்கூடிய அமைப்புள்ளதால் ஏற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்குகள் கூடும்.

ஆரோக்கியம்

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷப்படுவீர்கள். பணம், காசு, பேச்சுத்திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கழுத்து வலி, தொண்டை வலி அதிகமாக இருக்கும். சிலருக்கு மலச்சிக்கல், பைல்ஸ் தொடர்பான பாதிப்புகள், தூக்கமின்மை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புள்ளது. அலர்ஜி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. முதுகுத் தண்டுவடம், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வெளிநாடு யோகம்

மாணவ, மாணவிகளுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நல்ல பேச்சுத் திறமை, படிப்புத் திறமை, கணக்குப் போடும் திறமை, மனப்பாடம் செய்யும் திறமை அதிகரிக்கும். சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணிக்கை அதிகரிக்கும். வேலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் குறையும். வெளியூர், வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளது.

வழிபாடு

சலசலப்பு, டென்ஷன், மறதி ஏற்படுவது, நம்பிக்கையை இழப்புத போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குளிர்ச்சியான பொருள்கள், இனிப்புகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கும். மாமனாரின் உடல்நிலையில் கவனம் தேவை. லட்சுமி நாராயணர் வழிபாடு, பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+