Rasi palan this week: “இனி எல்லாமே ஏறுமுகம் தான்”.. ரிஷபம் ராசிக்கு வெற்றி, திடீர் யோகம்
Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசியினருக்கு ராசியதிபதி 6 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் புதிய கடன் ஏற்படும். வீட்டிற்கான கடனாக இருக்கும். ஆடம்பரத்துக்காக கடன் வாங்கும் அமைப்பு உள்ளது. பழைய காரை கொடுத்துவிட்டு புதிய காரை வாங்குவது, கணவன், மனைவிக்கு தொழில் வைத்துக் கொடுப்பதற்காக கடன் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் பாக்கியமும், வெற்றியும் உண்டாகும்.
முயற்சியில் வெற்றி
குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் கணவன், மனைவி வேலை நிமித்தம் காரணமாக பிரியும் அமைப்பு உள்ளது. சிறிய சிறிய சண்டை சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சனி வக்கிரமாக அமர்ந்துள்ளதால் நல்ல மனிதரின் தொடர்பு, சந்திப்பை ஏற்படுத்தும். மனதில் ஆனந்தமும், சந்தோஷமும் அதிகரிக்கும்.
திடீர் யோகம்
தனிப்பட்ட முறையில் அனுகூலம் காணப்படும். எதிரிகள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். திடீர் யோக பலன்கள் கிடைக்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள், தடைகள் நீங்கும். உத்தியோகம் ரீதியாக காணப்பட்ட கஷ்டங்கள் நிவர்த்தியாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.
கவனம்
தொழில், உத்தியோகத்தில் நல்ல ஏற்றங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்தில் தனிப்பட்ட முறையில் இருந்து பாதிப்புகள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் யோகம் உண்டாகும். பிள்ளைகள், பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பழக்கங்கள், நட்பு வட்டாரங்கள் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
ரத்த அழுத்தத்தில் கவனமாக இருப்பது நல்லது. திட்டமிட்டா காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். துர்க்கை வழிபாடு மதுரை மீனாட்சியம்மன் வழிபாடு, கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். கீழ்முதுகு, அடிவயிறு, கழிவுப் பாதை சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை.


Click it and Unblock the Notifications
