வச்சு செய்யும் அஷ்டமசனி.. சிம்ம ராசியை சுழற்றி அடிக்கப்போகும் ராகு.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தலைசுற்றல், வெர்டிகோ, ரத்த அழுத்தம், முட்டிவலி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். உறவுக்காரர்ரகளால் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அஷ்டமசனியின் வீரியம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
அஷ்டமசனி
ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளதால் அஷ்டமசனி உங்களுக்கு அதிகரிக்கும். தவறான வழிகாட்டுதல்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நல்லவர்களுடன் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. பெண்களால் பெண்களுக்கும், ஆண்களால் ஆண்களுக்கும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலை விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.
கவனம்
எதிர்மறையான நபர்களிடம் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். வேலைகளில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலதிகாரிகள்., சக ஊழியர்கள், முதலாளிகள், வேலையாட்களிடம் மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் வேலைக்கு ஆட்கள் வைத்திருந்தால் ஆவணங்கள், கோப்புகளை பத்திரமாக வைத்துக் கொள்வது நன்மை பயக்கும். வாகனங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
நேர்மறை சிந்தனை
பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உறவுக்காரர்களால் தேவையில்லாத பதட்டமும், மனக் கஷ்டமும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல நண்பர்களை வைத்துக் கொள்வது, நல்ல நண்பர்களுடன் பழகுவது நன்மை பயக்கும். ஒருவிதமான விரக்தி இருக்கும். மனதை பாசிட்டிவாக வைத்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
ஆண்கள், பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகளில் மிகுந்த கவனம் தேவை. அரசியல்வாதிகள் எழுச்சி பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். எந்த காரியத்தை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. மனதை நேர்மறையான எண்ணத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். குரு வழிபாடு, ரகவேந்திரர் வழிபாடு சகலவிதத்தில் நன்மைகளைத் தரும்.


Click it and Unblock the Notifications
