Rasi Palan: மே மாதத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் 5 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
மே மாத பலன்கள் 2026: மே மாதத்தில் 5 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். 5 ராசியினர் யார், என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், மே மாதத்தில் குரு சுக்கிரன் சேர்க்கையால் மிதுனம், துலாம், தனுசு, கும்பம், சிம்மம் ஆகிய 5 ராசியினருக்கு அற்புதமான யோகம், அதிர்ஷ்டம், பணம், காதல், திருமணம் என அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். நகை சேர்க்கும் யோகம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுனம் ராசியினருக்கு மிகப்பெரிய வெற்றிகளும், மேன்மையும் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்கள் அனைத்தும் அற்புதமாக நடக்கும். அழகு, ஐஸ்வர்யம், ஆடம்பரம் என அபாரமான யோகம் உண்டாகக்கூடிய மாதமாக இருக்கும். விரயத்தில் சூரியன் இருப்பதால் உணவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
முன்னேற்றம்
இந்த மாதம் வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். முன்பு செய்த முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்கும். ஆனால் அவசர முடிவுகளை தவிர்க்கவும். மேலதிகாரிகளுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. பணவரவு நிலை மேம்படும். எதிர்பாராத வருமானம் அல்லது bonus கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் செலவுகளும் அதிகரிக்கலாம். திட்டமிட்டு செலவழித்தால் சேமிப்பு செய்ய முடியும்.
ஆரோக்கியம்
அடிவயிறு, கழிவுப் பாதை, கண், பல் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் வந்து சரியாகும். அப்பா, மூத்த மகனின் ஆரோக்கியத்துக்கு செலவு செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்கிறேன் என்று சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வைகாசி மாதத்தில் கல்யாணம், காது குத்து, திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யாமல் இருப்பது நல்லது.
பணம் கொட்டும்
ஏராளமான வெற்றியைக் காணக்கூடிய மாதமாக இருக்கும். காசு, பணங்கள் வரக்கூடிய காலகட்டம். புதிய நட்பு உருவாகும். சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். ஜாலியாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். மன மகிழ்ச்சி, சந்தோஷம், பணத்துக்கு எந்தவொரு பிரச்சனைகளும் இருக்காது. ஆட்சி அமைக்கக்கூடிய யோகம் உண்டு. மிதுன லக்கினமாக இருந்தால் அமைச்சர் போன்ற பதவி கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு ஆட்டத்தை ஆரம்பிக்கும் நேரமாக இருக்கும். இடுப்பு வலி, பின்புற வலி போன்ற வலிகளில் கவனம் தேவை. கையிருப்பு பணத்தை வங்கியில் போட்டு சிக்குவது, வெளியில் கொடுத்து சிக்குவது போன்ற நிலைமைகள் இருக்கும். காசு, பணம், அதிர்ஷ்டம், குடும்பம் போன்ற விஷயங்களில் எந்தவொரு தொந்தரவும் ஏற்படாது.
வீடு, நிலம்
அரசாங்கத் துறையில் பெரிய பொறுப்புகள், வேலை கிடைக்கும். அரசு அதிகாரிகளாக நீங்களே மாறும் வாய்ப்புகள் ஏற்படும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, பத்திரம் பதிவது போன்ற அமைப்பு ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். முழு சுதந்திரம், தெய்வ அனுக்கிரகத்தோடு செயல்படக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
பணவரவு
பல நல்ல மாற்றங்கள் நடைபெறக்கூடிய காலமாக அமையும். குறிப்பாக தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில விஷயங்கள் இந்த மாதத்தில் சாதகமாக முடிவடையும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் சூழல் உருவாகும்.
ஜாக்பாட்
துலாம் ராசியினருக்கு பட்டாபிஷேகம் நடக்கக்கூடிய யோகம் உண்டு. என்ன வேண்டுமோ, செய்ய வேண்டுமோ அதனை திட்டமிட்டால் அற்புதமாக நடக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் அற்புதமான நேரமாக இருக்கும். துலாம், தனுசு, சிம்மம், மேஷம் ஆகிய ராசிகளைக் கொண்ட துணையாக இருப்பின் உங்களை கையால் பிடிக்க முடியாத அளவுக்கு அதிர்ஷ்டங்கள் கொட்டும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு காதல் இனிக்கும் காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். காதல் கைகூடும். வெளியூர் செல்வது, சுற்றுலா செல்வது போன்ற யோகங்கள் ஏற்படும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது, மொபைல் வாங்குவது, டிவி, ஃபிரிட்ஜ் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். மொபைல்களை அப்டேட் செய்வீர்கள்.
தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாகக்கூடிய காலகட்டமாக இருக்கும். இளைய சகோதரன், சகோதரிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. நிறைய பேருக்கு காது,மூக்கு, தொண்டை, பல் மருத்துவராகும் யோகம் உண்டு. செவ்வாய் பலமாக இருப்தால் ஆர்கிடெக்சர் படிக்கும் வாய்ப்பு உண்டு. சிவில் சர்வீஸ் படிப்பவர்களுக்கு வெற்றி ஏற்படும்.
வருமானம் சீராக இருக்கும். பழைய கடன்களை குறைக்கும் வாய்ப்பு கிடைக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு உயரும். குடும்பத்திற்காக சில பெரிய செலவுகள் வரலாம். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கலாம். உறவினர்களின் ஆதரவும் இருக்கும்.
படிப்பில் கவனம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்வர்களுக்கு சாதகமான காலம். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மீடியா தொழில், கலைத் துறை, நடனக் கலைஞர்கள், பாடகர்களுக்கு அற்புதமாக இருக்கும். ருத்ராபிஷேகம் செய்து ருத்ரனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதமும் ஏற்றத்தைத் தரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசியினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் 10 ஆம் இடத்தில் ஏராளமான கிரகங்கள் உள்ளதால் நீங்கள் செய்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். பெரிய பொறுப்புகள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் நல்ல காலகட்டம்.
வீடு வாங்கும் யோகம்
வண்டி, வாகனம் வாங்குவது, வீடு வாங்கும் யோகம் உண்டாகும். கிரகப் பிரவேஷம் செய்யும் யோகம் உண்டு. நட்பின் மூலமாக சந்தோஷம் ஏற்படும். காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். அரசாங்க வேலைகள் கிடைக்கும். மெடிக்கல் சீட் கிடைக்கும். நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
யோக பலன்
சிம்ம ராசியினருக்கு டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். கூட இருப்பவர்களை சரியாக வைத்துக் கொண்டால் எல்லா விஷயங்களும் சரியாகும். டிசம்பர் மாதம் வரை விநாயகர் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். எத்தனை பிரச்சனையாக இருந்தாலும் அவை பனிபோல விலகும். யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம்.
பணவரவு
பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சிலருக்கு bonus அல்லது எதிர்பாராத பணவரவும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வரலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பணம், காசிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பம் ஒன்று சேரும். கணவன், மனைவி ஒன்று சேரக்கூடிய யோகம் உண்டாகும். காதல் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுற்றுலா சென்று வருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் நன்றாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
நினைத்த விஷயங்களை சாதிக்கும் யோகம் உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியம், அப்பா, மாமனாரின் ஆரோக்கியம், கண் பிரச்சனை, வயிறு பிரச்சனை போன்றவை பெரியவர்களுக்கு இருக்கும். 7 ஆம் இடம் பலமாக இருப்பதால் நினைத்த காரியங்கள் சரியாக நடக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அவை சரியாகப் பொருந்தும்.
முன்னேற்றம்
பல புதிய மாற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைக்கும் மாதமாக அமையலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில விஷயங்கள் சாதகமாக முடிவடையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படலாம். வேலை தொடர்பான விஷயங்களில் கவனம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும் சூழல் உருவாகலாம்.
அதிர்ஷ்டம்
மன அமைதி மிகப்பெரிய அளவில் இருக்கும். அரசியலில் நல்ல இடம் கிடைக்கும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களையும் சரியாக செய்து முடிக்கும் யோகம் உண்டாகும். மனைவி மூலமாக, கணவர் மூலமாக அதிர்ஷ்டம் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.
-
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்!












Click it and Unblock the Notifications