சூப்பரா.. ஜம்முனு.. கும்முனு.. கடக ராசிக்கு அடுத்த 108 நாளில் செம அதிர்ஷ்டம்
கடகம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசி, லக்கினக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சனி வக்ர நிலையில், குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதிக்குள் உங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நடைபெறும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகி கைக்கூடி வரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, கடல் கடந்து செல்வீர்கள். எல்லாவற்றிலும் அதிர்ஷ்டம் ஏற்படும்.
வெளிநாடு யோகம்
உத்யோகத்தில் இட மாற்றம், புதிய பொறுப்புகள் தேடி வரும். ஏற்கனவே வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருப்போருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். தந்தை வழி உத்யோகம் கிடைக்கும். அரசு உத்யோகத்திற்கு முயற்சி செய்வோருக்கு எதிர்பார்த்த நல்ல அரசு உத்யோகம் கிடைக்கும். கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும். குரு பார்வையால் கடந்த காலங்களில் தடைபட்ட அனைத்து பலன்களும் இந்த காலத்தில் நிறைவேறும்.
ஆன்மிக பயணம்
கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். சிலருக்கு கோயில்களில் கும்பாபிஷேகம் உள்ளிட் முக்கிய நிகழ்ச்சி நடத்துவதற்கான வாய்ப்பு தேடி வரும். பிரிந்த நண்பர்கள் ஒன்றிணைவார்கள். பயணங்களாலும், பழைய நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். இறங்கும் அனைத்து காரியங்களிலும் ஜெயம் உண்டாகும்.
3.5 மாதங்கள் கில்லி
அடுத்த 3.5 மாதங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்வது சாமர்த்தியம். வம்பு, வழக்குகள், சொத்து பிரச்சனை ஆகியவற்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அப்பாவுடன் இருந்த மன கசப்பு நீங்கி பிணைப்பு உண்டாகும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுவோருக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மிகப்பெரிய பொறுப்பு
உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிச்சயம் உண்டு. இருக்கிற உத்யோகத்திலோ அல்லது புதிய உத்யோகத்தில் மிகப்பெரிய பொறுப்பு உங்களை தேடி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நீண்ட கால திட்டமிட்ட புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொருளாதாரம் உயர்வடையும். கடன் சுமை குறையும். குடும்பத்துடன் குல தெய்வ கோயில் சென்று மஞ்சள் தானம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications