கும்ப ராசிக்கு கூரையை பிய்ச்சுட்டு கொட்ட போகும் தங்கம் – 108 நாட்களில் இரட்டிப்பாகும் முதலீடு
மேஷம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்பம் ராசி, லக்கினக்காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்யவுள்ளார். குரு நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரம் ஏற்றமடையும். பணப்புழக்கத்திற்கு குறைவு இருக்காது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு உண்டு. இப்போது சனி உங்களின் தன, குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உத்யோகம், தொழிலில் உயர்வு உண்டு.
தன்னம்பிக்கை
பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். கடந்த காலங்களில் இழந்தவை ஒவ்வொன்றாக கைக்கூடி வரும். மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சு வராத குழந்தைகளுக்கு இந்த காலத்தில் பேச்சு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
நிம்மதி
வாக்கு ஸ்தானம் பலமடையும். ஆளமைத்திறன் அதிகரித்து சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நிம்மதியான சூழல் உருவாகும். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். வாழ்க்கை துணையுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி அந்யோநியம் கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கம். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். சுப காரிய தடைகள் விலகும். திருமண யோகம் உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தங்கம் முதலீடு
முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். தங்கம் மற்றும் வெள்ளியில் புதிய முதலீடு செய்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உத்யோகத்தில் இருந்தவர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. கலை, இலக்கியம், பேச்சு, எழுத்தாளர்களுக்கு இந்த காலம் நல்ல ஏற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். உங்கள் வீடு அருகில் உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications