அடிச்சான் பாரு அப்பாய்ன்மென்ட் ஆர்டரு.. மகர ராசிக்கு அடுத்த 108 நாட்களில் வரப்போகும் மாற்றம்
மகரம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகரம் ராசி, லக்கினக்காரர்களுக்கு மூன்றாம் இடமான உப ஜெய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யவுள்ளார். பொதுவாக சனி பகவான் மூன்றாம் இடத்தில் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் குரு பகவான் நட்சத்திரத்தில் பயணிப்பது அற்புதமான பலன்களை தரும். கடந்த காலங்களில் தடைபட்ட காரியங்கள் எல்லாம் இப்போது நனவாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
அரசு உத்யோகம்
அரசு பணிக்கு முயற்சி செய்வோர், போட்டி தேர்வு எழுதியோருக்கு இந்த காலத்தில் நல்ல செய்தி தேடி வரும். உங்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தி, அதற்கேற்ற உத்யோகத்தில் நல்ல பதவியுடன் அமர்வீர்கள். உங்கள் மனதில் இருந்த பயம், பதற்றம் குறைந்து தெளிவு பிறக்கும். சகோதர வழி உறவில் இருந்த மோதல்கள் தீர்ந்து இணக்கம் ஏற்படும்.
சுப காரியங்கள்
குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாத உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களுக்கு ஆண் வாரிசு பிறக்க வாய்ப்புள்ளது. பிரிந்த நண்பர்கள் ஒன்றிணைவார்கள். மீடியா, ஐடி, நிதி உள்ளிட்ட துறையில் இருப்போருக்கு பெரிய ஏற்றம் கிடைக்கும். நல்ல வேலை எதிர்பார்ப்போருக்கு நல்ல உத்யோகம் கிடைக்கும்.
சொத்து
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற அங்கீகாரம் தேடி வரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. பூர்விக சொத்து, வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நிலம், வீடு போன்ற சொத்து சேர்க்கை நிச்சயம் உண்டு. வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்வதற்கான முன்னேற்றம் ஏற்படும். கழுத்து பகுதியில் மட்டும் அதிக கவனம் வேண்டும். உங்கள் வீடு அருகே உள்ள முருகன் கோயில் சென்று வழிபடுவது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications