Rasi Palan This Week: யோகத்தை அள்ளும் மீனம் ராசி.. பொற்காலம் ஆரம்பம்.. என்ஜாய்
Meenam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு அபிவிருத்தி ஏற்படும். செல்வாக்குகள் கூடக்கூடிய அமைப்பு உள்ளது. பண வரவுக்கு உத்தரவாதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிகிச்சை முறைகளை மாற்றி குணமடைவீர்கள். சந்தோஷம் ஏற்படும்.
முயற்சிகளில் வெற்றி
புதிய முயற்சிகள் ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள், ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தினந்தோறும் உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். பிறர் குடும்பத்தில் உங்கள் தலையீடு, உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் ஆண்கள் விஷயத்திலும், ஆண்கள் பெண்கள் விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
முதலீடுகள்
மீன ராசியினருக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்பச் சுற்றுலா செல்வீர்கள். ஆராய்ச்சி செய்யும் இடங்கள், கலை நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். நிறைய பேருக்கு அரசு வேலை, போலீஸ் வேலை, தீயணைப்புத் துறையில் வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். பிக்சட் டெப்பாசிட், ரெக்கரிங் டெபாசிட் போன்றவற்றை செய்வீர்கள்.
மகிழ்ச்சி
மனதில் மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டாகும். இதுவரைக்கும் இல்லாத சந்தோஷத்தை இந்த காலகட்டத்தில் பார்பீர்கள். தேவையில்லாத டென்ஷன்களைத் தவிர்ப்பது நல்லது. கந்து வட்டிக்கு வாங்கியிருக்கும் கடன்களை திருப்பி அடைப்பீர்கள். கடனை அடைக்கும் முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். இறக்குமதி ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்
நினைத்தது நடக்கும்
நினைத்த காரியங்கள் நடக்கும் அற்புதமான நேரம். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்யும் யோகம் உண்டு. மலைக் கோயில்கள், குலதெய்வ கோயிலுக்கான பயணங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும். வேற்று மொழி மனிதர்கள் நல்ல ஆதாயங்கள் ஏற்படும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். தினந்தோறும் காகத்துக்கு உணவளிப்பது நன்மையைத் தரும்.
வழிபாடு
சங்கடங்கள் நீங்கும். செவ்வாய்க்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு காய்கறிகள் தானமாகக் கொடுப்பது நல்லது. விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். வாராஹி வழிபாடு, வராஹி மந்திரங்களைக் கேட்பது சங்கடங்களைத் தீர்க்கும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications