Rasi Palan: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்
Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்திற்கான சிம்மம், கன்னி ராசிக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் யோக பலன்கள் கிடைக்கும். துணை விஷயத்தில் இருந்து வந்த மனத் தாங்கல்கள், கஷ்டங்கள் நீங்கும். காதல் அமைப்பில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த கஷ்டங்கள் தீரும். குடும்பத்தாருடன் உள்ளூர் பயணம், வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
24 வயதை கடந்த சிம்ம ராசியினருக்கு ஆரோக்கியத்தில் மட்டும் அதீத கவனமாக இருக்க வேண்டும். தூக்கமின்மை, நரம்புக் கோளாறில் எச்சரிக்கை தேவை. வாகன அமைப்பில் மாற்றங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும். ராசியில் கேது பகவான் இருப்பதால் காரிய சித்தி மாலை கேட்பது ஏற்றத்தைக் கொடுக்கும். விநாயகர் வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. அந்நியோன்ய குறைபாடைத் தவிர்ப்பது நல்லது. காதல் அமைப்பில் தேவையில்லாத குழப்பங்கள் நீங்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றுவீர்கள். கனகதாரா ஸ்தோத்திர பாடல்களை கேட்பது பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
உறவுகள் தொடர்பான விஷயங்களில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சுக ஸ்தான அமைப்பில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. தர்க்கம், வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் விஷயத்தில் மிகுந்த இணக்கமாகவும், பேசாமல் இருப்பதும் நல்லது. விட்டமின், கால்சியம், பற்கள் குறைபாடுகளில் கவனமாக இருப்பது நல்லது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications