சனியின் அருளால் துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. அசுர வளர்ச்சி ஏற்படப் போகுது
துலாம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் துலாம்ை ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசி, லக்கினக்காரர்களுக்கு 6 ஆம் இடத்தில் சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் அமரப் போகிறது. கடன் கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு கட்டாயமாக கடன் கிடைக்கும். கிடைக்காமல் தட்டிப் போய்க் கொண்டே இருக்கும் விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கும் நடக்கும். உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் மீண்டும் உங்களை அழைத்து புதிய பொறுப்புகளைக் கொடுப்பார்கள்.
எதிரிகள் தொல்லை நீங்கும்
எதிரிகள் தொல்லை அவதிப்படுபவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடியும். ஒரு வீரியம் உண்டாகும். நல்ல வழக்கறிஞர்கள் அமைவார்கள். ஆடிட்டிங் துறையில் பெரிய இடத்தில் அமர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்போது நடக்கும். வங்கிகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். விவாகரத்து கேட்பவர்களுக்கு கட்டாயம் விவாகரத்து கிடைக்கும்.
அசுர வளர்ச்சி
உங்களை எதிர்க்க முடியாத அளவுக்கு சக்தியைப் பெறுவீர்கள். அசுர வளர்ச்சி உண்டாகும். பெரும் பணம் கிடைக்கும். வீடு, நிலத்தை விற்பதினால் பெரும் பணம் கிடைக்கும் யோகம் உண்டாகும். பெரிய வீடு கட்டுவீர்கள். வீட்டை விஸ்தீரணம் செய்வீர்கள். நிறைய பேர் விடுதிகள், ஹோட்டல் போன்றவற்றை வாங்குவீர்கள். வாடகைக்கு விடுவது, போக்கியத்திற்கு விடுவது போன்றவற்றை செய்து மகிழ்வீர்கள்.
பண வரவு
பணம், பணம் என்று பணத்திலேயே புலங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவாகும் வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்குள் பிரிவு வருவதற்கான வாய்ப்புள்ளது. பயணங்கள் மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் மூலமாக பணம் வரும். பிள்ளைகள் கண்டிப்பாக தங்கம் வாங்குவார்கள். பிள்ளைகளுக்கு குடும்பம் அமையும்.
ஆரோக்கியம்
கணவனாக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்திலும், மனைவியாக இருந்தால் கணவருடைய ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. வயிற்றில் சிறிய கட்டிகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. அஜீரணக் கோளாறுகளால் சில பேருக்கு பாதிப்பு ஏற்படும். மற்றபடி எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் ஏற்படாது.
வழிபாடு
வியாழக்கிழமை அன்று ராகவேந்திர சுவாமி மடத்திற்கு ஹஸ்தோகதத்தை கட்டிவிட்டு வருவது நன்மை பயக்கும். கடன் தீரும். பெரிய கடன்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications