Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ
March month rasi palan: சந்திர கிரகணம், சனிப்பெயர்ச்சி என மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் மாற்றங்கள், பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும்.

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் மார்ச் மாத பலன்
துலாம் ராசியினருக்கு அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்து கொடுக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையும். இன்னும் ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரை பெரிய சிக்கல்கள், பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. எதிர்ப்புகளை விலக்கி வைக்கக்கூடிய மாதமாக இருக்கும். எதிரியும் நண்பனாகக் கூடிய காலகட்டம். இலக்கை நிர்ணயிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கான லட்சியத்தை உறுதி செய்து அதை நோக்கி பயணிப்பீர்கள்.
மாணவர்களுக்கு இந்த வருடம் முழுவதுமே சிறப்பான ஆண்டாக இருக்கும். நீட், இன்ஜினியர், யுபிஎஸ்சி, சிவில் தேர்வுகளுக்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பெண்களுக்கு பெரிய நிம்மதி ஏற்படும். திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் எதை விரும்புகிறீர்களோ அவை அமையக் கூடிய அற்புதமான மாதமாக இந்த மாதம் அமையும். குடும்பத்தில் இருந்து வந்த, பணியில் இருந்து வந்த மன அழுத்தங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். கடன் தீரும். திட்டமிட்டு கடனை அடைப்பீர்கள்.
விருச்சிகம் மார்ச் மாத பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகள் தரக்கூடிய மாதமாக இருக்கும். அந்நிய இன, மத, மொழி பேசக்கூடிய ஒருவரின் மூலமாக கண்டிப்பாக நன்மைகள் கிடைக்கும். புதிய வேலையோ, பணமோ, தொழிலோ, வியாபாரமோ என ஏதோ ஒரு உதவி கிடைக்கும் காலகட்டம். சமீபத்தில் பழகியவரின் மூலமாக சிறப்பு நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டம். குழப்பம் கொள்ளத் தேவையில்லை.
புதிய நம்பிக்கை பிறக்கக்கூடிய மாதமாக இருக்கும். எதிர்பாராத உறவுகள், எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முன்னர் விட்டுப் போன உறவுகள், நண்பர்கள் மீண்டும் வாழ்க்கையில் வரும் அமைப்பு உண்டு. அரசாங்கம் சார்ந்த விஷயங்கள், உயர் அதிகாரம் கொண்டவர்களின் பழக்கம் இருக்கும் அமைப்புகள் ஏற்படும். அரசு அனுமதி கேட்டு காத்திருந்தவர்களுக்கு அதற்கான அனுமதிகள், வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும் நல்ல மாதமாக இருக்கும்.
தனுசு மார்ச் மாத பலன்
தனுசு ராசியினருக்கு சனி நல்ல பலன்கள் தரக்கூடிய அமைப்பு உள்ளது. தொழில் ரீதியான நன்மைகள் உண்டாகும். கணவன், மனைவி விஷயங்களில் நல்லவித மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, இளைய பருவத்தினருக்கு வாழ்க்கைத் துணையை அடையாளம் காணும் யோகம் உண்டாகும். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கு சுமூகமான தீர்வுகள் கிடைக்கும் அமைப்பு உள்ளது.
புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கக்கூடிய பாக்கியம் உண்டாகும். 80 சதவீதம் நன்மைகளைப் பெறக்கூடிய மாதமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் ஒரு வாய்ப்பு, கலைத் திறமையை காட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சனைகளுக்கு அதற்கான தீர்வுகள் கிடைக்கும். உங்களுக்கான விஷயங்கள் எல்லாம் உங்களுக்கே கிடைக்கும் யோகம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நல்ல காலகட்டம்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications