4 ராசியினருக்கு 30 நாட்களில் காத்திருக்கும் ஜாக்பாட்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். இந்த சூரிய கிரகண காலகட்டத்தில் யோகம் பெறும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். இந்த சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களுக்கு விருச்சிகம், கடகம், மேஷம், தனுசு ஆகிய 4 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாப எல்லாவற்றிலும் லாபம் அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் லாபம் இரண்டு மடங்காகும். இறங்கிய காரியத்தில் எல்லாம் வெற்றி குவியும். கடந்த காலங்களில் தடைபட்ட இழுபறி காரியங்கள் நிறைவேறும். குறிவைத்த இலக்குகள் நிச்சயமாக நிறைவேறும். உங்களின் தெளிவான செயல்பாட்டால் இலக்குகளை எளிதாக அடைவார்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் பண வரவு போன்ற நன்மைகள் ஏற்படும். பூர்விக சொத்துகள், வழக்குகள் உள்ளிட்டவற்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
கடன் கிடைக்கும்
விட்டதை எல்லாம் பிடிக்கும் காலம். எதிர்பார்த்த இடத்தில் புதிய கடன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் விரிவாக்கம் செய்வீர்கள். கனடா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கண்டம் உள்ளது. அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
பரிகாரம்
வீண் விவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இரவு நேர பயணம், தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பதற்றம், கோபம் ஆகியவற்றை தவிர்க்கவும். செம்பு பாத்திரம், கோதுமை வாங்கி தானம் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் வீடு அருகே உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவது ஏற்றம் தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு டாப் கிளாஸ் யோகம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். யார் உங்களை ஏமாற்றுகிறார்கள், குழப்புகிறார்கள் என்பதைக் கண்டறியும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். அடுத்த 40 நாட்களுக்கு எல்லா விஷயங்களும் உங்களுக்கு அப்பட்டமாக கண்ணுக்குத் தெரியும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பாடங்களையும் கற்றறியும் காலகட்டம்.
யோகம்
வீடு, நிலம் விற்பனையாகாமல் காத்திருப்பவர்களுக்கு விற்கக்கூடிய யோகம் உண்டாகும். நல்ல ஆள் கிடைப்பார்கள். வேறு மொழி பேசுபவர்களால் வீடு, நிலம் விற்கும் யோகம் உண்டாகும். வேற்று மொழி பேசும் மனிதர்கள் மூலமாக ஆதாயம் ஏற்படும். நல்ல பெயர் வாங்கக்கூடிய பிராப்தம் உண்டாகும். சான்றோர்களால் சான்றிதழ் கொடுக்கக் கூடிய நிலைமை உண்டாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் முழித்துக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அரசு பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டு. நல்ல பதவிகள் உங்களைத் தேடி வரும்.
சொத்துகள் சேரும்
சொத்துகள் வரக்கூடிய நேரம் இது. மாமனாரின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கழுத்து, எழும்பு, சுழுக்கு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கம்யூனிகேஷன்களில் தடைபட்டு ஜெயிக்கும் யோகம் உண்டாகும். அருகில் இருக்கும் சிவபெருமான் ஆலயத்துக்குச் சென்று பாகற்காய், பலாப்பழம், செம்பு பாத்திரம், கோதுமையை பிராமணர்களுக்கு தானமாகக் கொடுத்து வழிபட்டு வருவது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் பிரச்சனைகள், வாக்குவாதங்கள், சண்டைகள், கூடவே இருக்கும் நபர்களால் இருக்கும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். வேலை செய்யக்கூடிய இடத்தில் இருக்கும் குடைச்சல்கள் நீங்கும். எதிரிகளை ஜெயிக்கக்கூடிய வலிமை உண்டாகும். சூரியன், கேது சேர்ந்தால் மேஷ ராசி, லக்கினக்காரர்களுக்கு வழக்கில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். அரசாங்கத்துக்கு பாதிப்பையும், உங்களுக்கு வெற்றியும் உண்டாகும். வீடு, நிலம் அமையாதவர்களுக்கு நல்ல வீடு, இடம் அமையும். வீட்டின் ஓனரால் கொடுக்கப்பட்ட குடைச்சல்கள் நீங்கும்.
கவனம்
சக ஊழியர்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு கீழ் வேலை செய்யும் நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பாதுகாப்பு மிகவும் முக்கியம். சூரியன், கேது சேரும்போது மூலப் பத்திரம், பீரோவில் இருக்கும் பொருள்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புள்ளதால் கவனத்துடன் இருப்பது நல்லது.
பரிகாரம்
நல்ல நேரம் ஆரம்பிக்கும் காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். யாருடைய பேச்சை நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்களோ அவர் இனிமேல் உங்களை தொந்தரவு செய்வது குறையும். கோதுமை தொடர்பான பொருள்களை தானமாக அளிப்பது, சிவன் வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை மாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் பெருமாள் கோயில், நதி, குளம் போன்றவை இருப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். வரும் 40 நாட்களுக்கு மட்டும் பொறுமையைக் கடைப்பிடித்தால் போதும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். ஆனால், வெளியில் சொல்லாமல் செய்வது நன்மை பயக்கும். இந்த கேது கிரஸ்த சூரியகிரகணத்தில் மட்டும் செய்யும் வேலைகளை வெளியில் சொல்லக் கூடாது.
மருத்துவர்கள் கவனம்
மருத்துவர்களாக இருக்கும் தனுசு ராசியினர் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் செய்யும் அறுவை சிகிச்சையில் கவனம் தவறியதால் பெரிய பிரச்சனை, சர்ச்சைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. பெயர் கெடக் கூடும். 2 மருத்துவர்களுக்கிடையே பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசியினரும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
அயோத்தி ராமர் வழிபாடு செய்வது உங்களுக்கு மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். மன சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை, பெரியவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அயோத்தி ராமரின் பாதங்களில் புஷ்பத்தை வைத்து வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications