அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. ரிஷப ராசிக்கு அடுத்தடுத்து வரும் அதிர்ஷ்டம்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு மிக முக்கியமான காலகட்டம். உத்தியோகத்தில் இருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வம்பு, வழக்குகள், சண்டைகள், கோர்ட் கேஸ்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நல்ல எண்ணங்கள் வரும். மெட்டல் வியாபாரம் செய்பவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். கல், மணல், கட்டுமானம், குவாரி, ஆசிட், பிளாஸ்டிக் தொழில் செய்பவர்களுக்கு நல்ல அமைப்பு உள்ளது.
ஆரோக்கியம்
வீட்டில் இருந்து வந்த எலக்ட்ரிக், ஒயரிங் பிரச்சனைகள் அனைத்தும் நிவரத்தியாகும். தாயாரின் ஆரோக்கிய பாதிப்புகளை பார்த்துக் கொள்ள வேண்டும். கழிவுப் பாதை, கீழ் முதுகு, எலும்பு, நரம்பு பாதிப்புகள் வந்து நிவர்த்தியாகும். பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் அமைந்திருப்பதால் நட்பு வட்டாரங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளவது நல்லது. மனைவி, மூத்த குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.
முதலீடு
எதிரிகள் விஷயத்தில் பதட்டம் கொள்ளாமல் இருப்பது நன்மை. மன சஞ்சலங்கள் ஏற்படும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. திடீர் முதலீடுகள் வந்து சேரும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டாகும். லாபம், சந்தோஷம், அனுகூலம் காணப்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக யோக பலன்கள் கிடைக்கும்.
கெளரவம்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன வருத்தங்கள் தீரும். ரத்த பந்த உறவுகளுக்கு கெளரவம் ஏற்படும். ரகசியங்களை பரம ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. இதுவரை இருந்து வந்த மன வருத்தம், சஞ்சலம் உங்களை விட்டு வெளியேறும். முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும்.
வழிபாடு
உத்தியோகம், படிப்பு, தொழில் சம்பந்தப்பட்ட ஏற்றங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். தொலைதூர பயணங்களின்போது வழிபாடு செய்துவிட்டு செல்வது நல்லது. தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண யோகம் ஏற்படும். நல்ல வரன்கள் கிடைக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். திருத்தணி முருகப் பெருமான் வழிபாடு மேன்மையைத் தரும்.


Click it and Unblock the Notifications
