Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு டபுள் தமாக்கா.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rishabam-rasi-palan-what-kind-of-benefits-that-rishabam-taurus-sign-will-get-from-november-2-to-9

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். முருகனை வழிபடுவது அற்புதமான முன்னேற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். லாபம், அனுகூலம், முதலீடுகள், பண வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அனைத்து விஷயங்களில் வெற்றிகள் ஏற்படும்.

உதவிகள் கிடைக்கும்

வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். இதுவரை நிறைய காரியங்கள் தடைபட்டு வந்திருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்திருப்பீர்கள். கடன்களைக் கட்ட யாரேனும் உதவி செய்யும் யோகம் ஏற்படும்.

அனுகூலம்

தாய் வழி, தந்தை வழி உறவு அனுகூலத்தை ஏற்படுத்தும். பெற்றோர் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். ரத்த பந்த உறவுகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மன வருத்தங்கள், சங்கடங்கள் அனைத்தும் தீரும். முதுகுத் தண்டுவடம், கழுத்துப் பகுதி, சுழுக்கு போன்ற பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

தொழில்

படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், ஏஐ டெக்னாலாஜியில் இருப்பவர்கள், கணினித் துறையில் வேலை செய்பவர்கள் பெரிய புகழைப் பெறுவீர்கள். சம்பள உயர்வைப் பெறுவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்கும் யோகம் ஏற்படும். கெளரவம், புகழ் ஏற்படும். மார்க்கெட்டில் முதலீட்டாளர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸ்டார்ட் அப் தொடங்க நினைப்பவர்களுக்கு எல்லா நல்ல காரியங்களும் இனி நடக்கத் தொடங்கும்.

முன்னேற்றம்

வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதற்றத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள், நல்ல வாய்ப்புகள் வரும். பெரியவர்கள், உறவினர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.

முதலீடுகள்

கடன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கான யோகம் உண்டாகும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நல்ல முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+