Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் ரிஷப ராசி.. கேட்டதெல்லாம் கிடைக்கும் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷபம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வெளியிடம், தொழில், உத்தியோகம் அனைத்தும் நன்றாக இருக்கும். சுபகாரியத்தில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்திற்கான பொருள்களை வாங்குவீர்கள். பிரிந்துபோன தம்பதிகள் ஒன்று சேரும் யோகம் ஏற்படும். காதல் அமைப்பிலும், கணவன், மனைவி சண்டையும் பெரிதாகும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
நல்ல செய்தி
துர்க்கை வழிபாடு சகலவிதமான ஏற்றத்தைக் கொடுக்கும். பெண் தெய்வ வழிபாடுகள் நன்மையைக் கொடுக்கும். வண்டி, வாகன மாற்றங்கள், லாபங்கள் கிடைக்கும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். சந்தோஷமான அமைப்பு ஏற்படும். தாய் வழி, தந்தை வழி உறவுகளில் அனுகூலம் காணப்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
ஆரோக்கியம்
முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடுகளை செய்வீர்கள். கார்த்திகை மாதத்தில் ரிஷபம் இருக்கும் வீடுகளில் நல்ல காரியங்கள் நடக்கும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். முதுகு வலி, கழிவுப்பாதை, கழுத்து போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
பண வரவு சூப்பர்
காசு, பணத்துக்குப் பஞ்சமே இருக்காது. வீடு, வண்டி, வாகனம், சொத்துக்கள், திடீர் பண வரவுகள் கிடைக்கும். 6 ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் வங்கிக் கடன்கள் கிடைக்கும். நிறைய சொந்தபந்தங்கள் வருவார்கள். வீட்டில் உங்களுக்காக நடக்க வேண்டிய அரசு சம்பந்தப்பட்டது, தந்தை சம்பந்தப்பட்டது, வீட்டில் நடக்கும் அரசியல், கல்வி நிறுவனங்களில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும்.
டும் டும் சத்தம் கேட்கும்
திருமண யோகம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும். துணையிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. ஆண்களிடம் இணக்கமாகச் செல்லும் வாரமாக இருக்கும். இல்லையெனில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள், பிரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ரிஷபத்தில் இருக்கும் ஆண்களுக்கு அதிகமான கோவம் வரும் வாய்ப்புள்ளதால் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது.
வழிபாடு
பெண்களுக்கு விலை உயர்ந்த பொருள்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் நன்றாக இருக்கும். பிரித்யுங்கரா வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications