Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ராகு, புதன்.. பிப்ரவரியில் வரும் யோகம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர பகவான், மகாலட்சுமியை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். ரிஷப ராசி என்பது சுக்கிரனுடைய வீடு. வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஐந்து முக நெய் தீபம் போடுவது நல்லது. மகாலட்சு அஷ்டோத்திரைக் கேட்பது படிப்பது உங்களுக்கு அற்புதமான முன்னேற்றத்தைத் தரும். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடிய வகையில் உங்களுடைய செல்வம் உயரும்.
சொத்துகள் விற்கும் யோகம்
பிப்ரவரி மாதத்தில் ராசிநாதனாகிய சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்கிறது. இது மிகப்பெரிய பாக்கியத்தையும், யோகத்தையும் கொடுக்கும். உங்களுடைய பொருளாதார நிலை உயரும். செவ்வாய் உச்சமாக இருப்பதால் பழைய சொத்துகளை விற்பதற்கான முயற்சி, பூர்வீக சொத்துகளை விற்கும் முயற்சியில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
வேலை வாய்ப்பு
செவ்வாய் 9 ஆம் இடத்தில் உச்சமாக இருக்கும்போது சகோதரர்களுக்கு சில கருத்து மாறுபாடுகள் இருக்கும். சொத்தைப் பிரிப்பதிலோ, விற்பதிலோ சில தடைகள் வந்து நிவர்த்தியாகும். 4 ஆம் இடத்துக்குரிய சூரியன் 9, 10 ஆம் இடத்தில் பயணம் செய்வதால் ஒப்பந்த ரீதியிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வேலை நிரந்தரமாகும். தன ஸ்தானதிபதியாகிய புதன் பகவான் 10 ஆம் இடத்தில் ராகுவுடன் அமர்ந்திருக்கிறார்.
பண வரவு கொட்டும்
புதன் பகவான், ராகு சேர்க்கை ஆட்களுக்குத் தகுந்தாற்போல பேச வைக்கும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொடுக்கும். 2 இல் இருக்கும் குரு பகவான் நல்ல பண வரவைக் கொடுப்பார். 5 ஆம் இடத்திற்குரிய குரு 10 ஆம் இடத்தில் அமரும்போது பலருக்கு வேலையில் நெருக்கடி, புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
வழிபாடு
படிக்கக்கூடிய பிள்ளைகளைப் பொறுத்தவரை நல்ல மதிப்பெண்கள் பெறும் யோகம் உண்டாகும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கவனம் சிதறக்கூடிய சூழல் ஏற்படும். தொழிலை பெரியளவுக்கு விரிவுபடுத்தக்கூடிய யோகம் உண்டு. நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். திருச்செந்தூர் முருகப் பெருமான் வழிபாடு செய்வதும், தினந்தோறும் சஷ்டி கவசத்தைப் படிப்பதும் மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும்
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications